விருதுநகரில் தனித்து விடப்பட்ட தேமுதிக வேட்பாளர்: பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டாத அதிமுகவினர்

By இ.மணிகண்டன்

விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளருக்கு வாக்குச் சேகரிப்பதில் அதிமுகவினர் ஆர்வம் காட்டுவதில்லை என்று கூட்டணிக் கட்சிகளுக்குள் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் இம்முறை அதிமு கவும் திமுகவும் நேரடியாகக் களம் காணவில்லை. இவ்விரு பிரதான கட்சிகளும் கூட்டணிக் கட்சிக்கே விருதுநகர் தொகுதியை ஒதுக்கி உள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு ள்ளனர்.

இவர்களில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தொகுதிக்கு ஏற்கெனவே பழக் கமானவர் என்பதால் கூட்டணிக் கட்சியினரை ஒருங்கிணைத்து திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் உள்ளடி அரசியல் செய்த சிலரை கட்சியி லிருந்து நீக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமிக்கு விருதுநகர் தொகுதி புதிது என்பதால் திணறி வருகிறார். அவர் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு தேமுதிகவினர் முறையாக தகவல் தெரிவிப்பது இல்லை. அழைப்பு விடுப்பதும் இல்லை என்று அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் நேற்று காலை அழகர்சாமி பிரச்சாரம் செய்த போது, கூட்டணிக் கட்சியினர் சிலரை மட்டுமே காண முடிந்தது. அதில் பலர் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை எனப் புலம்பினர்.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட தேமுதிக நிர்வாகி ஒரு வர் கூறியதாவது: விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்கான அனைத்து வேலைகளையும் நாங்களே செய்ய வேண்டி உள்ளது. எங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்குச் சேகரிப்பதில் அதிமுக நிர்வாகிகள் பலர் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் கவனம் எல்லாம் சாத்தூர் தொகுதி இடைத்தேர்தலில்தான் உள்ளது என்றார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்