கட்சி மாறி எதிரணிக்குத் தாவும் தொண்டர்களும், நிர்வாகிகளும் அங்கு ‘ஒற்றர்களாக’ செயல்பட்டு தகவல்களைச் சேகரித்து பழைய கட்சியினருக்கு அனுப்பும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் அதிமுகவில் ‘புதிதாக இணைந்தவர்களின்’ செயல்பாடுகள் குறித்து கண்காணிக்கும் பணி மும்முரமடைந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் அரசியல் கட்சியினர் தேர்தலில் வெற்றிபெற, தங்கள் சாதனைகள், நிறைவேற்றப் போகும் திட்டங்கள் தொடர்பான பிரச்சாரத்தை மட்டுமே நம்பியிருப்பதில்லை. பொதுமக்களுக்குத் தெரியாமல் பல்வேறு மறைமுக வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். குறிப்பாக எதிரணியில் மும்முரமாக களப்பணி ஆற்றுபவர்களை பணத்தால் வளைத்து ‘வேகத்தைக் கட்டுப்படுத்தி’ அவர்களுக்கான ஓட்டுகளை தங்கள் பக்கம் திருப்புவது, கட்சியின் ஆதரவாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் பணம், பரிசு வழங்குவது என பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இது தவிர, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை தங்கள் பக்கம் இழுத்து தங்களைப் பலம் உள்ளவர்களாக காட்டிக் கொள்ளும் செயலிலும் ஈடுபடுகின்றனர். இதற்காக பிற கட்சிகளில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளைச் சந்தித்து பணம், பதவி தருவதாக ஆசை காட்டி தங்கள் பக்கம் இழுக்கின்றனர். இந்த ‘இடம்பெயர்வு’ நடவடிக்கையால் எதிர்அணி மீதான பிம்பத்தை உடைப்பதுடன், இன்னும் பலரும் வரக் காத்திருக்கின்றனர் என்று கூறி மாற்றுக் கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
சமீப காலமாக தேனி மாவட்ட அதிமுகவில் இதுபோன்ற மாற்றுக் கட்சியினரின் வரவு அதிகமாக இருந்தது. ஆரம்பத்தில் அதிமுகவினர் மகிழ்ச்சியடைந்தாலும், புதிதாக வந்தவர்கள் பலர் ‘ஒற்றர்களாக’ செயல்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பிரச்சாரத்தின்போது கொடி பிடித்து உணர்ச் சிப்பூர்வமாக கோஷமிடும் புதியவர்களின் உள்ளமோ ‘கிளம்பிவந்த’ அணிக்கு சார்பாகவே இருக்கிறது. இக்கட்சியுடன் கலந்து அவர்களின் செயல்பாடு, நடவடிக்கை, திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் அறிந்து கொள் கின்றனர். பின்பு பழைய கட்சி நிர்வாகிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து விடுகின்றனர். இதனால் எதிரணியினரும் இதற்கேற்ப வியூ கங்களை மாற்றி களப்பணியாற்றி வருகின்றனர்.
தேர்தல் பரபரப்பில் ஆரம்பத்தில் இதை கண்டுகொள்ளாத அதிமுக பின்பு தங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிரணிக்குச் செல்வது குறித்து ஆராயத் தொடங்கினர். அப்போதுதான் ஸ்லீப்பர் செல்களான ‘புதிய வரவுகள்’ மூலம் எதிர் அணியினருக்கு தகவல் பரிமாற்றம் நடைபெறுவது தெரிய வந்தது. சமீபத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள், எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டனர். இதைத்தொடர்ந்து, சமீபத்தில் இணைந்த தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கண் காணிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. அவர் களை அருகில் வைத்துக் கொண்டு முக் கிய விஷயங்களைப் பேசுவதையும், களப்பணி குறித்து விவாதிப்பதையும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தவிர்த்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago