புதுச்சேரி, காரைக்காலில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 97.5 சதவீதமாக அதிகரிப்பு: அரசு பள்ளிகளிலும் 6.7% வரை உயர்வு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.57 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 3.2 சதவீதம் அதிகம். அரசு பள்ளிகளும் கடந்த ஆண்டை விட 6.7 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்து 94.8 சதவீதம் பெற்றுள்ளது.

புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 16,520 மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மொத்தமாக 97.57 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் மாணவர்கள் 96.53 சதவீதமும், மாணவிகள் 98.60 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், இதில் அரசு பள்ளிகள் 94.85 சதவீதமும், தனியார் பள்ளிகள் 98.99 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதிய 16,520 மாணவ, மாணவிகளில் 16,119 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி காரைக்காலில் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 3.2 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 6.7 சதவீதம் அதிகம். புதுச்சேரி, காரைக்காலில் மொத்தமுள்ள 302 பள்ளிகளில் 190 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. இதில் அரசு பள்ளிகள் 43. நூற்றுக்கு நூறு: கணிதத்தில் 25 பேரும், அறிவியலில் 18 பேரும், சமூக அறிவியலில் 81 பேரும் என 124 பேர் நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்