வாக்குப்பதிவு இயந்திரங்களில் பார்வையற்றோர் வாக்களிக்க பிரெய்லி எண்களை பயன்படுத்துவதில் நிலவிய சிக்கலுக்கு தேர்தல் ஆணையம் தீர்வு: சென்னையை பின்பற்றி நாடு முழுவதும் அமல்

By ச.கார்த்திகேயன்

தேர்தலில் பார்வையற்றோர் வாக் களிக்க ஏதுவாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரெய்லி எண் களை பயன்படுத்துவதில் நிலவிய சிக்கலுக்கு தேர்தல் ஆணையம் தீர்வு கண்டுள்ளது. சென்னையை பின்பற்றி நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் முதல் முறை யாக பரிசோதனை முறையில் கடந்த 1998-ம் ஆண்டு மின்னணுவாக்குப் பதிவு இயந்திரங்கள், 3 மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்பட்டன.

அதன் பின்னர், பார்வையற்ற வர்கள் வாக்களிக்க ஏதுவாக பிரெய்லி முறையில் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் பிரெய்லி முறையில் வேட்பாளர்களின் வரிசை எண்கள் இடம்பெற்றன.

அண்மைக் காலமாக போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அதனால் ஒரு வாக்குச் சாவடியில் அதிகபட்சமாக 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுகின்றன. இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை பொதுவாக பயன்படுத்தும் வகையில், இயந்திரத்தின் வலது புறம் உள்ள பொத்தான்களுக்கு அருகில் எண் 1 முதல் 16 வரை பிரெய்லி முறையில் இருக்கும். 3 இயந்திரங்களை வைக்கும்போது முதல் இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் எண்கள் இடம்பெற்றுள்ள நிலையில், 2-வது இயந்திரத்தில் 17, 18 என எண்கள் இருக்காது அதிலும் 1 முதல் 16 வரை தான் பிரெய்லி முறையில் எண்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால் வேட்பாளர்கள் பட்டியலில் 40 வேட்பாளர்கள் இருக்கும் நிலையில், 1 முதல் வரிசையாக 40 வரை எண்களும், பெயர்களும் இடம்பெற்றிருக்கும். இந்த நடைமுறை நாடு முழுவதும் பார்வையற்றோர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 2017-ம்ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில், மாற்றுத்திறனாளி அமைப்புகள் தங்கள்ஆட்சேபங்களை தெரிவித்திருந்தனர். அதை ஏற்றுக்கொண்ட சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம், 2-வது மற்றும் 3-வது வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்கெனவே 1 முதல் 16 வரை இருந்த நிரந்தர பிரெய்லி எண்கள் மீது, 16, 17 என பிரெய்லியில் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. நிரந்தரமாக உள்ள பிரெய்லி எண்கள் மீது பிரெய்லிஎண்கள் இடம்பெற்ற ஸ்டிக்கர்கள் ஒட்டியபோது, எண்களை படிப்பதில் சிரமங்கள் இருந்தன.

ஸ்டிக்கர்களையும், இயந்திரங் களில் சரியாக ஒட்ட முடியவில்லை.

இப்பிரச்சினைகள் குறித்து, தற்போது நடைபெறும் மக்களவைமற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆலோசனை கூட்டங்களில்விவாதிக்கப்பட்டு, தீர்வுகாணப் பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், வாக்குப்பதிவு இயந்திரம்-1, இயந்திரம்- 2, இயந்திரம்- 3 என இயந்திரங்களின் தலைப் பகுதியில் பிரெய்லி முறையில் எண்களை ஒட்டுவது என்றும், வேட்பாளர் பட்டியலை பிரெய்லி முறையில் தயாரிக்கும்போது, இயந்திரம் 1-ல் உள்ள வேட்பாளர்கள் பட்டியல் தனியாகவும், இயந்திரம் 2 மற்றும் 3-ல் உள்ள வேட்பாளர்கள் பட்டியல் தனித்தனியாகவும் தயாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய மாற்றத்தை அமல்படுத்த, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் கருத்துரு அனுப்பி இருந்தது. அதை ஏற்ற தேர்தல் ஆணையம், நாடு முழுவதும் அதேபோன்று செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இந்த நடைமுறை, 18-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்