மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்த லில் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு கமல்ஹாசன் சவாலாக இருப்பார் என்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் தெரிவித்தார்.
‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு ஆர்.மகேந் திரன் அளித்த சிறப்பு பேட்டி:
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு மட்டுமே ஆகும் நிலையில், தனித்துப் போட்டியிடுவது சவாலாக இல்லையா?
தமிழகம், புதுச்சேரியின் 40 மக்கள வைத் தொகுதிகள், 18 தொகுதி சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடு வது சவால்தான். யாருக்குதான் சவால் அல்ல. 50 ஆண்டுகள், 100 ஆண்டுகள் கடந்த கட்சிகளுக்குகூட தேர்தல் என்பது சவால்தான். அதே நேரம், நேர்காண லில் வந்தவர்களின் உற்சாகம், எண்ணிக் கையைப் பார்க்கும்போது எங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று தோன்றவில்லை.
தேர்தல் பணிகள் எந்த அளவுக்கு முடிந்திருக்கிறது?
40 தொகுதிகள் முழுவதும் அனைத்து பகுதிகளிலும், பொறுப்பாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று மக்கள் நீதி மய்யத் துக்கு வாக்கு கேட்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. எங்கள் கொள்கையின் அடிப்படையில் டார்ச்லைட் சின்னம் கிடைத்திருப்பதும், தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்.
அடித்தட்டு மக்களிடம் மக்கள் நீதி மய்யத்தை கொண்டுசெல்ல என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
பிரச்சாரம் செய்ய நகர்ப்புறங்களுக்கு நாங்கள் செல்வது இல்லை. கிராமப்புறங் களுக்கு மட்டுமே செல்கிறோம். அங்கு நாங்கள் கூப்பிடாமலே அவர்களாகவே திரண்டு வருகின்றனர். அடித்தட்டு மக்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யம் சென்று சேர்ந்துவிட்டது என்பதற்கு இதுவே அடை யாளம். குக்கிராமத்தில்கூட மக்கள் நீதி மய்யத்தின் சின்னம் போய் சேர்ந்திருக் கிறது. அடித்தட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
திமுக - அதிமுக என்ற 2 மிகப்பெரிய கூட்டணியை எதிர்த்து வெற்றி பெற முடியும் என்று எப்படி நம்புகிறீர்கள்?
திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்கு கள் அனைத்தும் மக்கள் நீதி மய்யத்துக்கு வரும் என்று சொல்லவில்லை. இருப்பி னும், கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் சவாலாக விளங்கு கிறது என்பதே வெற்றியின் முதல் படி. நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம். இத்தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு கமல்ஹாசன் மிகப்பெரிய சவாலாக இருப்பார்.
நீங்கள் 30 ஆண்டு அனுபவம் கொண்ட மருத்துவர். விவசாயத்தில் ஆர்வம், அனுபவம் மிக்கவர். தேர்தலில் வெற்றி பெற இது போதுமா? உங்கள் கட்சியில் தலைவர் உட்பட பலருக்கும் இதுதான் முதல் தேர்தல். அனுபவம் இல்லாதவர்களுக்கு வெற்றி எந்த அளவு சாத்தியம்?
ஒவ்வொரு தேர்தலிலும், கடந்த முறை யார் வெற்றி பெற்றார்கள் என்று பார்த்து மக்கள் வாக்களிப்பதில்லை. இப்போது நடக்கும் தேர்தலில் நம் தொகுதியில் யார் நிற்கிறார்கள், அவர்களுக்கு இருக்கும் நற்பெயர், சமூகத்துக்கு என்ன செய்துள் ளார், என்ன செய்வார் என்ற நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில்தான் வாக்களிப்பார்கள். கட்சியின் கொள்கை, நோக்கம் பிடித்திருந்தால் கட்டாயம் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்.
தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல் வெளியீடு எப்போது?
கோவை கொடீசியா வளாகத்தில் வேட்பாளர் அறிமுக விழா வரும் 24-ம் தேதி நடக்க உள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையும், வேட்பாளர் பட்டியலும் அதற்கு முன்பு வெளியிடப்படும். கோவை கூட்டத்துக்கு முன்பு சில முக்கிய அறிவிப்புகளும் வெளியாகும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago