தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் குறித்து தமிழகத்தில் உள்ள ஏறத்தாழ 1 கோடி குடும்பங்களுக்கு அஞ்சல் துறை மூலம் கடிதம் அனுப்பி வருகிறார் முதல்வர் பழனிசாமி.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி கடந்த டிசம்பர் மாதம் ஆயுஷ்மான் திட்டத்தில் இணைக்கப்பட்ட 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு அஞ்சல் கடிதம் அனுப்பினார். பிரதமரின் இந்த பாணியை பின்பற்றி, தமிழக அரசு செயல்படுத்தி வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து விரிவான முறையில் ஒருபக்க கடிதத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை தயாரித்துள்ளது. இக்கடிதத்தில் தமிழ்நாடு அரசு முத்திரை, முதல்வரின் பெயர் மற்றும் புகைப்படம், தலைமைச் செயலக முகவரி மற்றும் தேதி (22.02.2019) ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெறுவதற்கு குடும்ப அட்டை, உரிய கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட வருமானச் சான்றிதழ் (குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு குறைவாக) போதுமானது. இவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உறுப்பினர் சேர்க்கை மையத்தில் (District Kiosk) சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி இத்திட்டத்தின் கீழ், 1,027 நோய்களுக்கான சிகிச்சையை அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம். அவசர காலத்தில் பயனாளியிடம் அடையாள அட்டை இல்லை என்றாலும் மின்னணுமுறையில் அடையாள அட்டையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன.
சிகிச்சை முறைகள்
அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகள்மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் விவரங்களை அறிந்துகொள்ளும் இணையதள முகவரி (www.cmchistn.com), கட்டணமில்லா தொலைபேசி எண் (1800 425 3993) உள்ளிட்ட விவரங்களும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தேவைப்படும்போது இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று, என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் என முடியும் அந்த கடிதத்தின் நிறைவாக உங்கள் அன்பு சகோதரன், எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் என்ற வாசகத்துடன் முதல்வரின் கையொப் பமும் இடம்பெற்றுள்ளது.
மேலும், கடிதத்தின் வெளிப்புறப் பக்கத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எனக் குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோரது புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த கடிதங்கள் தமிழகத்தில் உள்ள அஞ்சல் துறையின் 4 மண்டலங்களுக்கும் மொத்தமாக அனுப்பப்பட்டு, அங்கிருந்து மாவட்டங்களுக்கு அனுப்பப்பட உள்ளன. இவற்றை அனுப்ப வேண்டிய முகவரிகள் தனியே அச்சிடப்பட்டு, கடிதங்களுடன் அனுப்பப்பட்டுள்ளன. முகவரி அடங்கிய தாளை கடிதங்களில் ஒட்டும் பணி நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி முடிந்தவுடன் கடிதங்கள் மார்ச் 10-ம் தேதி முதல் உரிய முகவரிக்கு சேர்ப்பிக்கப்படும் என அஞ்சல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் தேர்தல் பிரச்சாரத்துக்கான ஒரு உத்திதான் இத்தகைய கடிதம் அனுப்பும் பணி என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago