இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு: இடைக்காலமாக குக்கர் சின்னம் ஒதுக்க கோரிக்கை

By ஆர்.பாலசரவணக்குமார்

பன்னீர்செல்வம் - பழனிசாமி அணிக்கே இரட்டை இலை சின்னம் சொந்தம் என டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, இடைக்காலமாக தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 2017 நவ.23-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த பிப்.28-ம் தேதி பிறப்பித்த தீர்ப்பில், ‘‘இரட்டை இலை சின்னத்தை பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணிக்கு ஒதுக்கிதலைமை தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், ‘இரட்டை இலை சின்னத்தை பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பையும் ரத்து செய்ய வேண்டும். அதுவரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும். நாங்கள் அமமுக கட்சி சார்பில் தேர்தலை சந்திக்க ஏதுவாக எங்களுக்கு இடைக்காலமாக குக்கர் சின்னத்தை ஒதுக்கித்தர உத்தரவிட வேண்டும்’ என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்