மக்களவைத் தேர்தல் கூட்டணி: அதிமுகவை முந்திக் கொண்ட திமுக

By எஸ்.விஜயகுமார்

மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை அமைப்பதற்கு அதிமுக முந்திக் கொண்டு முதலில் களமிறங்கிய நிலையில், தாமதமாக களத்தில் இறங்கிய திமுக, கூட்டணி அமைப்பதில் முந்திக்கொண்டு முதல் நகர்த்தலை வெற்றிகரமாக சாதித் துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை அமைப்பதில் முந்திக் கொண்டது அதிமுக. பாமக., பாஜக கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு அறிவித்த பின்னர் அதிமுக-வில் கூட்டணி நடவடிக்கைகள் மந்தமானது. ஆனால், கூட்டணிப் பேச்சுவார்த்தையை தாமதமாகக் தொடங்கிய திமுக, தன்னுடன் கூட்டணிக்கு வந்த அனைத்து கட்சிகளுடனும் சுமுகமாக பேச்சு வார்த்தையை முடித்து, தொகுதிப் பங்கீட்டினை வெற்றிகரமாக முடித்து, முதல் கட்ட அரசியலில் ஸ்கோர் செய்துள்ளது.

குறிப்பாக, மக்களவைத் தேர்த லில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை தாரளமாக விட்டுக் கொடுத்தாலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் தொகுதியை ஒதுக்காமல் ராஜதந் திரத்தை கையாண்டு கூட்டணியை திமுக இறுதி செய்துள்ளது.

மறைந்த தலைவர் கருணாநிதி இல்லாமல் திமுக சந்திக்கப் போகும் முதலாவது பொதுத் தேர்தல் இது. அதிலும், திமுக-வின்தலைமை பொறுப்புக்கு வந்துள்ள ஸ்டாலின், சந்திக்கப்போகும் முதல் பொதுத்தேர்தல். ஜனநாயகப்பாதையில் அரசியல் எதிரி களை தேர்தலில் சந்திக்க களமிறங் கியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். மத்தியில் பாஜக ஆட்சி இருக் கும் வரை, அதிமுக ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, காங்கிரஸூடன் நெருக்கம் பாராட்டி, அவர்கள் எதிர்பார்த் ததற்கும் மேலாக, மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளை ஒதுக்கினார்.

அடுத்து, மக்கள் நலக்கூட்டணி யாக, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக-வை கடுமையாக எதிர்த்த மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொண்டு அவர்களிடத்திலும் சுமுகபேச்சுவார்த்தை நடத்தி தொகுதி களை ஒதுக்கி இரண்டாவது நகர்த்தலையும் கச்சிதமாகச் செய்துள் ளார்.

மேலும், அனைத்து தரப்பின ரையும் ஒருங்கிணைப்பது போல,கொங்கு மண்டலத்தின் வாக்குகளை குறிவைத்து கொமதேக வையும் சிறுபான்மையினர் வாக்குகளுக்கு முஸ்லிம் லீக் கட்சியையும் பாமக-வின் எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் என சரிவிகித பலத்துடன் கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணியை இறுதி செய்துள்ளார்.

மூன்றாவதாக, தாமதமாகத் தொடங்கினாலும், கூட்டணிப் பேச்சுவார்த்தையை வெற்றிகர மாக முடித்து, திமுக கூட்டணிக்குள் வருவதற்கு தயக்கம் காட்டிய தேமுதிக-வுக்கு மறைமுகமாக ‘செக்’ வைத்துள்ளார். கூட்ட ணிக்கு தேமுதிக வந்தாலும் வராவிட்டாலும் தேர்தலை சந்திக்கதயார் என்பதை உணர்த்தவே, திமுக கூட்டணி உடன்பாடு முடிந்தது என்று ஸ்டாலின் அறிவித் துள்ளார். தேமுதிகவுக்கு செக்ஒருவேளை தேமுதிக கூட்ட ணிக்குள் வந்தால், தன்னிடம் இருந்து 2 தொகுதி, காங்கிரஸிடம் இருந்து 3 தொகுதி என ஒதுக்கிக் கொடுத்து, அதிமுக-வுக்கு எதிராகபலமான கூட்டணியை உருவாக் கவும் திமுக தயாராக இருக்கிறது என்று திமுக-வினர் கூறுகின்றனர். அதற்காகவே, தேமுதிக வரா விட்டாலும், தங்களது கூட்டணி மீது விமர்சனம் எழுவதைத் தடுக்க, கூட்டணி உடன்பாடு முடிந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி தனது ராஜதந்திரத்தை திமுக வெளிப்படுத்தி உள்ளது எனகின்றனர் அரசியல் நோக்கர் கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்