50 லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே அட்ரீனல் சுரப்பியில் இரு புறமும் கட்டிகள் வரும் அபூர்வ நோய் சிவகங்கையை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு வந்தது.
மதுரை அரசு மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றி தாயையும், சேயையும் காப்பாற்றினர்.
சிவகங்கை மாவட்டம் இளையான் குடி அருகே அரியாண்டிபுரத்தை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி பெண் புனிதா ராணி(24). தீராத தலைவலி, மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டு வந்தது. சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பரிசோதனையில் ரத்த அழுத்தம்(250/130) மிகுதியாக இருந்தது. மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்த்ததில், அவருக்கு சிறுநீரகத்தின் மேல் புறம் உள்ள வலது மற்றும் இடது அட்ரீனல் சுரப்பியில் கட்டிகள் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
அட்ரீனல் சுரப்பி, உடலின் தண்ணீர் மற்றும் உப்பு சத்தை சமநிலைப்படுத்தும். கர்ப்பிணி பெண்ணுக்கு அட்ரீனல் சுரப்பியில் இரு புறமும் கட்டி வருவது மிக அபூர்வமானதாக மருத்துவ உலகில் கூறப்படுகிறது.
மதுரை அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சைத்துறை தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.தாமோதரன் தலைமையில் அகச்சுரப்பியல் துறை உதவிப்பேராசிரியர் ச.முத்துக்குமார், அறுவை சிகிச்சைத்துறை உதவிப்பேராசிரியர் பாலமுரளி, மயக்கவியல் துறை மருத்துவர்கள், செல்வகுமார், கார்த்திக் பிரேம்குமார், மகப்பேறுத்துறை மருத்துவர் சுமதி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர், சுமார் 5 மணி நேரம் போராடி கர்ப்பிணி பெண்ணின் அட்ரீனல் சுரப்பிகளையும் அதில் இருந்த கட்டிகளை அகற்றினர். கட்டிகளை மட்டும் தனியாக அகற்ற முடியாது என்பதால் மருத்துவர்கள் அட்ரீனல் சுரப்பி கட்டிகளையும் சேர்த்து அகற்றினர்.
அதனால், அட்ரீனல் சுரப்பிகள் செய்ய வேண்டிய வேலைகளை செய்வதற்காக இந்த பெண் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இடதுபுறம் அகற்றப்பட்ட கட்டி ½ கிலோ இருந்தது. வலதுபுறம் கட்டி 300 கிராம் இருந்தது.
இதுகுறித்து ‘டீன்’ வனிதா கூறுகையில், ‘‘இந்த(பியோகுரோமோசைட்டோமா) அட்ரீனல் கட்டியானது 50 லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும் அரிய நோயாகும். மேலும், கற்ப காலத்தில் இது மிகமிக அரிதாக வரும். இந்த கட்டியானது வந்தால் தாய், சேய்க்க ஆபத்தை ஏற்படுத்தும். தாயின் உயிருக்கு 80 சதவீதமும், சிசுவின் உயிருக்கு 30 சதவீதமும் மரணத்தை ஏற்படும்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பு நன்றாகவே உள்ளது. இந்த அறுவை சிகிச்சை ஒரு பைசா செலவில்லால் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதாக இருந்தால் 5 முதல் 7 லட்சம் ரூபாய் வரை செலவாகும், ’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago