தமிழக காவல்துறையில் ஏற்கனவே ஒன்பது டிஜிபிக்கள் உள்ள நிலையில், புதிதாக ஐந்து ஏடிஜிபி கள் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறையில் 87 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள் கூடுதல் டிஜிபி தரத்தில் உள்ள 5 அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போதுள்ள பதவியும் டிஜிபியாக பதவி உயர்த்தப் பட்ட பிறகு மாற்றப்பட்ட பதவியும் விபரம் வருமாறு:
1. ரயில்வே டிஜிபியாக உள்ள ரயில்வே டிஜிபியாக பதவி வகித்துவரும் கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு ரயில்வே துறையிலேயே டிஜிபியாக தொடர்கிறார்.
2. போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகித்து வரும் கரண் சின்ஹா டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு அதே துறையில் டிஜிபியாக தொடருகிறார்.
3. உணவு கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக பதவி வகித்து வரும் பிரதீப் வி பிலிப் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு அதே துறையில் டிஜிபியாக தொடர்கிறார்.
4. போலீஸ் பயிற்சி கூடுதல் டிஜிபியாக பதவி வகித்துவரும் ஆர் சி கொட்வாலா டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு அதே துறையில் டிஜிபியாக தொடர்கிறார்.
5. சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் விஜயகுமார் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் இந்த பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago