கல் கேபிள் நிறுவனத்தின் உரிமம் ரத்து செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

'கல்' கேபிள் நிறுவனத்தின் எம்.எஸ்.ஓ. உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்யதது செல்லாது என அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகரங்களில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவை அளிப்பதற்கான எம்.எஸ்.ஓ. உரிமத்தை 'கல்' கேபிள் நிறுவனம் பெற்றிருந்தது. இந்நிலையில், 'கல்' கேபிள் நிறுவனத் துக்கு ‘செக்யூரிட்டி கிளியரன்ஸ்’ வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டதால், அதற்கு வழங்கப்பட் டிருந்த எம்.எஸ்.ஓ. உரிமத்தை ரத்து செய்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் கடந்த மாதம் 20-ம் தேதி உத்தரவிட்டது.

எம்.எஸ்.ஓ. உரிமம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ‘'கல்' கேபிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 'கல்' கேபிள் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "கேபிள் டி.வி. ஒளிபரப்புக்கான சிக்னல்களை அளித்து வரும் ‘கல்’ கேபிள் நிறுவனத்தால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே உரிமத்தை ரத்து செய்ய மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தது சரியல்ல" என்று வாதிட்டார்.

வழக்கில் விசாரணை முடிந்ததையடுத்து, தீர்ப்பை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்: "கல் கேபிள் நிறுவனம் தொடர்பாக மத்திய அரசின் உத்தரவு செல்லாது. கேபிள் நிறுவனம் மீது வேறு புகார்கள் இருந்தால் அதை சட்டப்படி விசாரிக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE