சென்னை எழும்பூரில் இருந்து  மதுரைக்கு தேஜஸ் சொகுசு ரயிலின் முதல் பயணம் தொடங்கியது: கட்டணம் அதிகம் என்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைவு

By கி.ஜெயப்பிரகாஷ்

சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தேஜஸ் அதிவிரைவு சொகுசு ரயிலின் முதல் பயணம் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு நேற்று தொடங்கியது. கட்ட ணம் அதிகம் என்பதால் குறைவான பயணி களே பயணித்தனர். கட்டணத்தை குறைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

சர்வதேச தரத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களோடு சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்பால் தேஜஸ் ரயில் பெட்டிகள் கடந்த ஆண்டு நவம்பரில் தயாரிக்கப்பட் டன. மொத்தம் 15 பெட்டிகள் கொண்ட இந்த

ரயிலில் 12 பெட்டிகள் ஏசியுடன் அமரும் வசதியுடனும் 1 பெட்டி  உயர்வகுப்பாகவும் 2 டீசல் ஜெனரேட்டர் பெட்டிகளும் உள்ளன.

எஃப்ஆர்பி தகடுகளால் ஆன அழகிய உட்புறம் சொகுசாக அமர்ந்து பயணம் செய்யும் வசதியான இருக்கைகள் உள்ளன.

ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் சிறிய வீடியோ திரைகள், தானியங்கி டீ மற்றும் காபி இயந்திரங்கள், மத்தியில் அமரும் பயணிகளுக்கு சிற்றுண்டி மேசை யின் உட்புறம் மடக்கும் வசதி கொண்ட வீடியோ திரைகள், ஜிபிஎஸ் அடிப்படையி லான பயணிகள் தகவல் அறியும் வசதி, எல்ஈடி விளக்குகள், தானியங்கி கதவுகள், பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியில் உட்புறம் மடக்கி வைக்கும் வகையிலான சிற்றுண்டி மேசைகள், செல்போன் சார்ஜ் செய்ய வசதி உள்ளிட்ட 22 சிறப்பு அம்சங் களுடன் அமைக்கப்பட்டுள்ளன. உயர் வகுப்பு ஏசி சொகுசு பெட்டியில் 56 பேரும், ஏசி  பெட்டியில் 78 பேரும் என ஒரே நேரத் தில் மொத்தம் 992 பேர் பயணிக்கலாம்.

இந்த புதிய அதிவிரைவு சொகுசு ரயில் சென்னை - மதுரை இடையே பிரதமர் மோடி கடந்த 28-ம் தேதி தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த சொகுசு

ரயில் (22671) மதியம் 12.30 மணிக்கு மதுரை செல்லும். இதேபோல், மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (22672) இரவு 9.30 மணிக்கு எழும்பூர் வரும். திருச்சி மற்றும் கொடைக்கானல் சாலை மட்டுமே நின்று செல்லும். வியாழன் தவிர மற்ற 6 நாட்களிலும் இந்த ரயில் கள் இயக்கப்படுகின்றன. மணிக்கு 110 கிமீ வேகத்தில் செல்வதால் ஆறரை மணி நேரத்தில் சேரும் இடத்தை அடையலாம்.

இந்த ரயிலின் முதல் நாள் சேவை நேற்று தொடங்கியது. இதன் கட்டண விவரம் வருமாறு: சென்னை - திருச்சி ஏசி பெட்டி - ரூ.690, முதல் வகுப்பு சொகுசு - ரூ.1,485, சென்னை - மதுரை ஏசி - ரூ.895, முதல் வகுப்பு சொகுசு - ரூ.1,940. இருமார்க்கத்திலும் இதே கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்த ரயிலில் அமரும் வசதி கொண்ட இருக்கைகளே உள்ளன. படுக்கை வசதி கிடையாது.

இதுதவிர, உணவுடன் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்தால், கட்டணம் மேலும் ரூ.100 முதல் ரூ.200 வரையில் அதிகரிக்கும். ஆம்னி பேருந்துகளை போல் கட்டணம் அதிகமாக இருந்ததால், இந்த ரயிலில் கூட்டம் குறைவாக இருந்தது. மொத்தமுள்ள இருக்கைகளில் 30 சதவீத இருக்கைகள் மட்டும் நிரம்பி இருந்தன.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘ஆம்னி பேருந்துகள் போல் கட்டணம் அதிகமாக இருக்கிறது. ரயில் போக்குவரத்தை அத்தியாவசிய தேவை யாக கருத்தில் கொண்டு கட்டணத்தை குறைக்க வேண்டும்’’ என்றனர்.

ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘முதல் நாள் என்பதால் கூட்டம் கணிசமாக இருந்தது. வரும் நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். கட்டணம் குறைப்பது பற்றி நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. வாரியம்தான் முடிவு செய்யும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்