கருத்து சுதந்திரம் குறித்து மாணவி சோபியாவிடம்தான் கேட்க வேண்டும் எனக் கூறிய தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு திமுகவில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா என்று கனிமொழிதான் சொல்ல வேண்டும் என ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார் அதே தொகுதி பாஜக வேட்பாளார் தமிழிசை.
முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற கனிமொழி செய்தியாளர்கள் கருத்து சுதந்திரம் பற்றி எழுப்பிய கேள்விக்கு, "என்னுடைய தனிப்பட்ட கருத்து சுதந்திரத்தை நான் பேசவில்லை. நான் திமுக என்ற மாபெரும் கட்சியின் பின்னணியில் பேசுகிறேன். ஆனால் உண்மையான கருத்துச் சுதந்திரம் பற்றி மாணவி சோபியாவிடம் தான் கேட்க வேண்டும். அவருடைய கருத்து சுதந்திரம் எப்படி பறிக்கப்பட்டது என்று தமிழிசையிடம் கேளுங்கள் அல்லது சோபியாவிடம் கேளுங்கள்" எனக் கூறியிருந்தார்.
இதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார் தமிழிசை. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "சாதிக் பாட்சா மரணம் பற்றிய விளம்பரம் செய்தஅவரது மனைவி மீது தாக்குதல் நடத்திய திமுக?பற்றி பெண்ணுரிமை பேசும் கனிமொழி?பதில் கூறுவாரா?" எனப் பதிவிட்டுள்ளார்.
சாதிக் பாட்சா 2 ஜி வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தார். விசாரணை நடைபெற்ற வேளையில் அவர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் அந்த சோபியா?
கனிமொழி குறிப்பிட்ட சோபியாவையும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் படித்துக் கொண்டிருந்த தமிழக மாணவி சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த போது, அவர் வந்த அதே விமானத்தில் தமிழிசையும் பயணப்பட்டார்.
விமானத்திலேயே பாசிச பாஜக ஒழிக என்று அவர் கோஷமிட்டார். பின்பு, விமான நிலையத்திற்கு வந்த பிறகும் அவருடைய கோஷம் வலுப்பெற்றது. இதைத் தொடர்ந்து பாஜகவினர் மற்றும் அப்பெண்ணிற்கு இடையே பேச்சுவார்த்தை முற்றியது. தமிழிசை அளித்த புகாரின் பெயரில் சோபியா மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago