வாக்குப்பதிவு மையங்களில் வாக்களிக்க 7 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுமா?- தேர்தல் ஆணைய நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருப்பு

By மு.யுவராஜ்

வாக்குப்பதிவு மையங்களில் வாக்களிக்க தங்களுக்கு தேவையான வசதிகள் தேர்தல் ஆணையத்தின் மூலம் செய்து தரப்படுமா என்று 7 லட்சம் மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் மாற்றுத்திறனாளிகளாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்காக ஒவ்வொரு தேர்தலின்போதும், வாக்குப்பதிவு மையங்களில் சாய்வு தளங்கள் அமைக்கப்படுகின்றன.

பிரெய்லி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படுகிறது. வரும் மக்களவை தேர்தலில் 94454 77699 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இருப்பினும். இந்த வசதிகள் போதுமானதாக இல்லை என்று மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடுஅனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் கூறியதாவது:

வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும். பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகளில் 10 சதவீதம் பேர்தான் பிரெய்லி படித்தவர்களாக உள்ளனர். எனவே,கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஹெட்செட் மூலம்ஒலியைக் கேட்பதன் அடிப்படையில் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 21 வகையான வசதிகள்3 அடிக்கும் குறைவான உயரமுள்ள மாற்றுத்திறனாளிகளால் வாக்குப்பதிவு மையங்களில் அவர்களைவிட அதிக உயரத்தில் இயந்திரம் இருப்பதால் வாக்குப்பதிவுசெய்ய முடியவில்லை. அதுபோன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உயரத்தை சரி செய்ய சிறிய அளவிலான நாற்காலிகளை மையத்தில் வைப்பது, தொழுநோயால் கைவிரல்களை இழந்தமாற்றுத்திறனாளிகளுக்கு குரல்பதிவின் மூலம் வாக்குப்பதிவு செய்வது உட்பட மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான 21 வகையான வசதிகளை தனித்தனியாக தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பகுதியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வாக்குப்பதிவு மையத்தை அமைத்து இந்த வசதிகளை செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் எத்தனை மாற்றுத்திறனாளிகள் உள்ளார்கள் என்ற விவரமே தேர்தல் ஆணையத்திடம் இதுவரை இல்லை. எங்களுடைய கணிப்பின்படி தமிழகத்தில் உள்ள 12 லட்சத் துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளில் குழந்தைகள், 18 வயதுக்கு கீழானவர்களை தவிர்த்தால் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்காளர்களாக இருப்பார்கள். வாக்காளர் அட்டையை மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்யும்போதே மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான குறியீடுகளை வாக்காளர் அட்டையில் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, செய்வதன் மூலம் சுலபமாக மாற்றுத்திறனாளிகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்