அரசியலின் முக்கியப் பிரபலங்கள் பற்றி ‘நச்’ கமென்ட்ஸ் தந்துள்ளார் நாஞ்சித் சம்பத்.
‘இந்து தமிழ்திசை’க்கு நாஞ்சில் சம்பத் அளித்த சிறப்புப் பேட்டியில், முக்கிய அரசியல் பிரபலங்கள் சிலரின் புகைப்படங்களைக் காண்பித்து, கமென்ட்ஸ் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில்...
கருணாநிதி - சந்தனத் தமிழின் சிந்தனை ஊற்று. கால்கொண்டு நடந்த கலிங்கத்துப் பரணி.
ஜெயலலிதா - நடக்க முடியாத கடல் அலையின் பெருமுழக்கம். விலக்க முடியாத விரிவானம்.
ராகுல் காந்தி - நேரு குடும்பத்தின் மிச்சமாக இருக்கக்கூடிய ஒற்றை ரோஜா. இவனே இந்தியாவின் இன்றைய நம்பிக்கை.
எடப்பாடி கே பழனிசாமி - முதலமைச்சர் என்ற அதிகாரத்தில் இருப்பது, வியாபாரம் செய்வது என்று கருதுகின்ற வித்தியாசமான முதலமைச்சர்.
நரேந்திர மோடி - இந்தியாவின் கோபுரப் பெருமையை குட்டிச் சுவராக்கியவர்.
கமல்ஹாசன் - அரசியலை பொழுதுபோக்குக்கும் பயன்படுத்த முடியும் என்று சமீப காலமாக நிரூபித்துக் கொண்டிருப்பவர்.
விஜயகாந்த் - நலிவுற்றிருக்கிறார். ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் நான் பார்த்த விஜயகாந்தை, நாளைக்கும் பார்க்க ஆசைப்படுகிறேன்.
திருமாவளவன் - ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக, பருவ சுகங்களை மறந்து உழைக்கிற ஒரு கர்மயோகி.
ஓ.பன்னீர்செல்வம் - காலில் விழுந்தே காரியம் சாதிக்கிறவர்.
சீமான் - தமிழ்த் தேசியத்துக்கும், திராவிடத் தேசியத்துக்கும் வித்தியாசம் தெரியாமலேயே அரசியல் பண்ணுகிற அபூர்வ மனிதர்.
சசிகலா - சுகங்களுக்கு அடிமையுறாத சூரியப் பருந்து.
மு.க.ஸ்டாலின் - நூறாண்டு காணுகிற திராவிட இயக்கத்தின் முகம்.
ரஜினிகாந்த் - நல்ல நடிகர்.
அன்புமணி - நேவாதேவி அரசியலுக்கு இப்போது வடிவம் தருகிற வேலையைப் பார்க்கிறார்.
தமிழிசை - தமிழக அரசியலில் தொங்கு சதை.
டிடிவி தினகரன் - திசை தெரியாமல் தவிக்கிறவர்.
எச்.ராஜா - வாயில் கூவத்தை வைத்திருக்கிறவர்.
கனிமொழி - கலைஞரின் அரசியல் வாரிசாகவும், இலக்கிய வாரிசாகவும் பரிணமிக்கிறவர்.
வைகோ - மானத் தமிழர்களின் ஞானம் பாடி.
தமிழருவி மணியன் - 100 சதவிகிதப் போலி.
உதயநிதி ஸ்டாலின் - திரை நட்சத்திரம். முரசொலிக்கு இப்போது இவரே முகமாக இருக்கிறார்.
நாஞ்சில் சம்பத் - அதிமுகவில் இருந்த சம்பத். அதை மறக்க விரும்புகிறேன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago