உள்ளாட்சி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் போட்டியிடும்: ஜி.ராமகிருஷ்ணன் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட முடிவு செய்து உள்ளது என்று கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளர்.

இது குறித்து செய்தி யாளர்களிடம் அவர் ஞாயிற்றுக் கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

கோயம்புத்தூர் மேயர் வேட்பாளராக அந்த மாவட்ட கட்சி செயற்குழு உறுப்பினர் சி. பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாய்ப்பு இருக்கக் கூடிய இடங்களில் எங்களுடைய கட்சி போட்டியிடும். எதிர்க்கட்சிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் அரசு இடைத் தேர்தலை அறிவித்திருக்கிறது. இது முறையான செயல் அல்ல. நடைபெற உள்ள இடைத்தேர்தல் முறையாக நடைபெற வேண்டும்.

மத்தியில் பொறுப்பேற்றுள்ள பாஜக கட்சி அனைத்து துறைகளிலும் இந்துத்துவ கொள்கையை பின்பற்றி வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் பொருளாதார கொள்கையில் எந்த வித்தியாசமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE