அதிமுக கூட்டணியில் பாமக போய்ச் சேரும் சூழ்நிலையை உருவாக்கி, அதிமுக அதிக தொகுதிகளில் போட்டியிடுவதைத் தடுத்திருப்பது திமுகவின் அரசியல் வியூகத்துக்கு கிடைத்த வெற்றி என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் நேற்று அளித்த சிறப்புப் பேட்டி:
கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடு கையில் இத்தேர்தலை எத்தகைய சவாலாகக் கருதுகிறீர்கள்?
1977-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மிகவும் முக்கியமானது. 1977-ல் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து போராடினர். அதுபோல நாட்டின் இறையாண்மை, சுதந்திரம், மதச் சார்பின்மை, பன்முகத்தன்மை, அரசியலமைப்பு சாசனத்தையும் பாதுகாப்பதற்கான அதிமுக்கியத் துவம் வாய்ந்த தேர்தலாக இத் தேர்தல் அமைந்துள்ளது. இத்தேர் தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதால் முக்கி யத்துவம் பெறுகிறது. யாருக்கு என்ன விருப்பு, வெறுப்பு இருந்தா லும் மோடி தலைமையிலான மத்திய அரசை வீழ்த்துவதே இத்தேர்தலின் மையப்புள்ளி யாகும். அதுபோல பாஜகவுடன் சேர்ந்துள்ள அதிமுகவை வீழ்த்து வதும் அவசியம்.
திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது?
தேர்தல் தேதி அறிவிக்கும் வரை தொகுதி உடன்பாடு ஏற்படுவதற்கான நடைமுறைகள் மெதுவாகத்தான் நடைபெறும். 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஒன்றரை மாதம் வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. 10 சுற்று பேச்சுவார்த்தையெல்லாம் கூட நடைபெற்றிருக்கிறது.
அதனால் தொகுதி உடன்பாட்டில் வழக்கமான தாமதம்தான். அதிக தொகுதிகளைக் கேட்டுள்ளோம். இணக்கமான சூழலில் வரும் 6-ம் தேதிக்குள் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிடும்.
அதிமுக கூட்டணிக்கு பாமக சென்றதால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமா?
தேர்தலில் நேரடியாக வீழ்த்த வும், மறைமுகமாக வீழ்த்தவும் வியூகம் வகுக்கப்படும். அதன்படி, அதிமுகவின் பலத்தைக் குறைப் பதற்காக திமுக வியூகம் அமைத் துள்ளது. அதன்மூலம் அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக் கிறது. கடந்த மக்களவைத் தேர்தல் களில் அதிமுக கூட்டணி அமைத் துப் போட்டியிட்டாலும் 25 தொகுதிகளுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டுள் ளது. ஆனால், இத்தேர்தலில் அதுபோல நடக்க வாய்ப்பில்லை. அதிமுக கூட்டணியில் பாமக போய்ச் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு எவ்வித பின்னடைவும் இல்லை.
மக்களுக்காகப் போராடும் இடதுசாரிக் கட்சிகளுக்கு மக்கள், ஆட்சி அதிகாரத்தைக் கொடுக்காமல் இருப்பது ஏன்? அந்த நிலையை எட்டுவதற்கு முயற்சி செய்கிறீர்களா?
கம்யூனிஸ்டுகள் நேர்மையாக, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதால் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது உண்மை. ஆனால், பொதுவுடைமை சமுதா யத்தை அமைக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுட மையாக்கப்பட வேண்டும், பெரு முதலாளிகள் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், பெரிய நிலப்பிரபுக்களிடம் உள்ள நிலத்தை பறிமுதல் செய்து ஏழைகளுக்கு பிரித்துத் தர வேண்டும் என்று கோருகிறோம்.
இதனால், இவர்கள் எங்களை தவறாக விமர்சிக்கிறார்கள். அவை மக்கள் மத்தியில் வேரூன்றியிருக்கிறது. அதையும் மீறி மக்களிடம் எங்கள் செல்வாக்கு வளர்கிறது. மக்களிடம் இதைப் புரிய வைக்க வேண்டும். இது நீண்டகாலப் பணியாகும். தேர்தல் காலத்தில் மட்டும் இதைச் செய்து முடிக்க முடியாது. தற்போது சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் இடதுசாரிகளின் சிந் தனைகள் வளர்கின்றன. பொதுப் பிரச்சினைகளில் அவர்கள் போராடுவதை உதாரணமாகச் சொல்லலாம்.
பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ள உயர் சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி யிருப்பது இத்தேர்தலில் பிரதி பலிக்குமா?
இந்த இடஒதுக்கீட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், இதை தேர்தலை மனதில் கொண்டு அவசர அவசரமாக கொண்டு வந்த தைத்தான் எதிர்க்கிறோம். அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து, மக்களிடம் கருத்தொற்றுமையை ஏற்படுத்திய பிறகு இதைக் கொண்டு வந்திருக்கலாம். தமிழ் நாட்டில் ஏற்கெனவே 69 சதவீத இடஒதுக்கீட்டில் 93 சதவீத மக்கள் வந்துவிட்டனர். அதனால் மேற்படி 10 சதவீத இடஒதுக்கீட்டால் இத்தேர்தலில் குறிப்பாக தமிழ் நாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பெரிய விவாதப் பொருளாகவும் வராது.
திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?
திமுக கூட்டணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏனென்றால், தமிழ்நாட் டில் எந்த பிரதமருக்கும் இல்லாத அளவுக்கு மோடிக்கு கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் உள்ளது. அதிமுக பிளவுபட்டிருப்பதாலும், பாமக ஏற்கெனவே கரைந்து வருவ தாலும் இந்த மூன்று கட்சிகளின் வாக்குவங்கி சரிந்துள்ளது. பழைய அதிமுகவாக இருந்திருந் தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருப்பார்கள். தற்போது அந்த அள வுக்கு பலம் இல்லை என்பதை தற்போதைய அதிமுக உணர்ந் திருக்கிறது. அதனால்தான் இல்லா ததையும், பொல்லாததையும் சொல்லி இடைத்தேர்தலையும் நிறுத்தி வைக்கிறார்கள்.
அதிமுக கூட்டணியில் சமூக நலன், மக்கள் நலன் இல்லை என்று மக்கள் கருதுவதால் அதிமுக கூட்டணிக்கு தோல்வி நிச்சயம். புதிய வாக்காளர்கள் இவர்களை ஆதரிப்பதற்கான எவ்வித உத்தரவாதமும் இல்லை. எனவே, திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago