தேமுதிக கூட்டணி விவகாரம் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. அதிமுகவுடன் இணையும் என ஒபிஎஸ் பேசி உள்ள நிலையில் துரைமுருகன் இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தைக்கான கதவை திமுக மூடியுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இன்று பிரதமர் கூட்டம் நடக்க உள்ள நிலையில் தேமுதிக கூட்டணிக்கு வராமல் இழுத்தடித்தது.
இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. விஜயகாந்த், சுதீஷ், பிரேமலதா ஆலோசனை நடத்தினர். மறுபுறம் முதல்வர் இல்லத்தில் ஆலோசனை நடந்தது. எப்படியாவது கூட்டணிக்குள் தேமுதிகவை கொண்டுவருவதில் முயற்சி எடுத்தனர்.
பியூஷ் கோயல் சமாதானம் பேசினார். இந்நிலையில் தேமுதிக நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ், இளங்கோவன், அனகை முருகேசன் ஆகியோர் துரைமுருகனை சந்திக்க அவரது இல்லத்துக்கு வந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்கள் அவர்களிடம் கேட்டபோது அரசியலுக்காக இல்லை தனிப்பட்ட முறையில் சொந்த விஷயத்துக்காக வந்தோம் என்று கூறிவிட்டுச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago