பஞ்சு விலை உயர்வு!- கவலையில் தமிழக நூற்பாலைகள்

By ஆர்.கிருஷ்ணகுமார்

பஞ்சு விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் உள்ள நூற்பாலைகள் கவலையடையத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக பெரிய துறையாகத் திகழ்வது ஜவளித் துறை. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.75 கோடி பேல் பஞ்சு தேவைப்படுகிறது. தமிழகத்துக்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு கோடி பேலுக்கும் மேல் பஞ்சு தேவைப்படுகிறது.

எனினும், தமிழகத்தில் சுமார் 6 லட்சம் பேல் பஞ்சு மட்டுமே உற்பத்தியாகிறது. 90 சதவீதம் மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், கர்நாடக மாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் பருத்தி ஆண்டாக கணக்கில் கொள்ளப்படுகிறது. அதேசமயம், ஆகஸ்ட் முதல் மே மாதம் வரை பஞ்சு சீசன் இருக்கும்.

நடப்பு பருத்தி ஆண்டில், சீசன் தொடக்கத்திலேயே எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு கண்டி பஞ்சு ரூ.45,500 என்ற விலையில் விற்பனையானது. பின்னர், வரத்து அதிகரித்ததால், விலை ரூ.44 ஆயிரமாக குறைந்து, கடந்த பிப்ரவரி மாதம் ரூ.42 ஆயிரத்தை எட்டியது. அதைத் தொடர்ந்து நூல் விலையும் அதற்கேற்ப குறைந்திருந்தது.

இதற்கிடையில், கடந்த 15 நாட்களில் பஞ்சு விலை அதிரடியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு கண்டிக்கு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை அதிகரித்து, தற்போது ரூ.44,500 வரை கொள்முதல் விலைக்கு விற்கப்படுகிறது. லாரி வாடகையுடன் சேர்த்து  நூற்பாலைக்கு ஒரு கண்டி பஞ்சு வந்து சேரும்போது  ரூ.46,000-ஆகிறது.

தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பஞ்சு வரத்து பெருமளவு குறைந்துள்ளதால், பஞ்சு அரைவை ஆலைகள் செயல்பாட்டை நிறுத்தத் தொடங்கியுள்ளன. மேலும், சீனாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சீசன் தொடங்க 6 மாதங்கள் உள்ள நிலையில், இந்த விலையேற்றம் நூற்பாலைகளைக் கவலையடையச் செய்துள்ளது.

இது தொடர்பாக இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன்  கூறும்போது, “நாட்டில் உள்ள  5.5 கோடி கதிர்களில் (ஸ்பிண்டில்) 40 சதவீதம், அதாவது 2 கோடிக்கும் மேற்பட்ட கதிர்கள் தமிழகத்தில்தான் உள்ளன.

நூற்பாலைகளின் நூல் உற்பத்தி செலவில் ஏறத்தாழ 65 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை, மூலப் பொருளான பஞ்சுக்காக செலவிடப்படுகிறது. இதனால், பஞ்சு விலையில் குறுகிய காலத்தில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் நூற்பாலைகளை நேரடியாகப் பாதிக்கும்.

தற்போது 15 நாட்களில் ரூ.2,500-க்கும் மேல் பஞ்சு விலை உயர்ந்துள்ளதால், நூற்பாலைகளின் உற்பத்தி செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதை சமாளிக்கும் வகையில், இந்த வாரத்தில்  நெசவுக்கு உபயோகப்படும் வார்ப் நூலின் விலையை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை நூற்பாலைகள் உயர்த்தியுள்ளன.

வரும் நாட்களில், ஹொசைரி நூலின் விலையும் இதேபோல உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது. சதவீத கணக்கில் பார்க்கும்போது பஞ்சு விலை கடந்த சில நாட்களில் மட்டும் 6 சதவீதம் உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை நூல் விலை உயர்ந்தால் மட்டுமே, மூலப் பொருள் விலை

உயர்வைச் சமாளிக்க நூற்பாலைகளால் முடியும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்