10 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் மார்க்சிஸ்ட் மீண்டும் போட்டியிட முடிவு

By சுப.ஜனநாயக செல்வம்

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.

மதுரை மக்களவைத் தொகுதியில் மதுரை மேற்கு, கிழக்கு, மத்தி, வடக்கு, தெற்கு, மேலூர் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத் தொகுதியில் திமுக, அதிமுக கட்சிகளோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது. இதன் மூலம் இத்தொகுதியில் காங்கிஸ் இதுவரை 8 முறை வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு முறையும், ஜனதா கட்சி ஒருமுறையும் வென்றுள்ளன.

காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு செல்வாக்குள்ள இத்தொகுதியில் 2009 தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ம.மோகனை எதிர்த்து போட்டியிட்ட மு.க.அழகிரி 1,40,985 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்று மத்திய அமைச்ச ரானார். அதற்கடுத்த தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 2014 தேர்தலில், திமுகவை நேரடியாக எதிர்த்து போட்டியிட்டது. அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 4,54,167 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் வ.வேலுச் சாமியை (2,56,731) விடக் கூடுதலாக 1,97,436 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி மதுரை தொகுதியைக் கேட்டுப் பெறவுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சி மதுரையில் களம் காணப்போகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறியதாவது: மதச்சார்பின்மை கொள் கையோடு திமுக காங்கிரஸ் கூட்ட ணியில் அங்கம் வகிக்கிறோம். காங்கிரஸ் சார்பில் 13-ம் தேதி கன்னியாகுமரியில் நடக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க ராகுல்காந்தி வரு கிறார். அன்று காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படலாம் என காங் கிரஸார் தெரிவி க்கின்றனர். அதேபோல, திமுக போட்டியிடும் தொகு திகளும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளன.

நாங்கள் மதுரை தொகுதியை ஒதுக்கும்படி கேட்டுள்ளோம். எங்களுக்கு ஒதுக்கினால் போட்டியிடுவோம். அல்லது கூட்டணிக் கட்சி யின் வெற்றிக்கு பாடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்