பரிசுப்பெட்டி மூலம் பட்டுவாடா என காண்பித்தால் டிடிவிக்கு ஆதரவு என்பதா? ம.நீ.மய்யம் வேட்பாளர் ஆவேசம்

By ஸ்கிரீனன்

பரிசுப்பெட்டி மூலம் பொதுமக்களிடம் பட்டுவாடா செய்ய துவங்கிவிட்டார்கள் என காண்பிக்க பரிசுப்பெட்டியை காட்டினால்,  மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டிடிவிக்கு பிரச்சாரம் செய்கிறார் என்று பரப்புவதா? என கேள்வி எழுப்பியுள்ளார் ம.நீ.மய்ய வேட்பாளர்.

கமலின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இதனைத் தொடர்ந்து அவரது வேட்பாளர்கள் அனைவருமே கையில் டார்ச் லைட்டுடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

பொள்ளாச்சி தொகுதியைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மூகாம்பிகை அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். குடியிருப்பு பகுதியில் வாக்குச் சேகரிக்கும் போது, மூதாட்டி ஒருவர் அமமுக கட்சியின் பரிசுப் பெட்டி சின்னத்தைக் மூகாம்பிகையின் கையில் கொடுத்தார்.

அப்போது, இதே போல் தாங்களும் டார்ச் லைட்டை பரிசாக கொடுப்பீர்களா என்று மூதாட்டி கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியானது. மேலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கையில் பரிசுப் பெட்டி சின்னம் என்று மூகாம்பிகையின் புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வந்தேன். அப்போது ஒரு பாட்டி என்னிடம் வீட்டிற்குள் சென்று பரிசுப்பெட்டியை எடுத்து வந்து கொடுத்தார். உங்களுடைய சின்னம் டார்ச் லைட் என்றால், நீங்களும் டார்ச் லைட் கொடுப்பீர்களா என்று கேட்டார். அவருடைய முகம் எதற்கு என்று, நான் கையில் பரிசுப் பெட்டியை வைத்துக் கொண்டு இப்படிக் கொடுத்தால் என்ன பண்ணுவது, ஊர் முழுக்க பரிசுகள் கொடுத்து பழகிவிட்டார்கள்.

இவ்வாறு மூகாம்பிகை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்