உண்மையான ஹீரோக்கள் பின்னால் ஒளிந்து கொண்டு நிஜ ஹீரோக்களாக பாசாங்கு செய்ய வேண்டாம்: மோடி பேச்சுக்கு சித்தார்த் சாடல்

By ஸ்கிரீனன்

நீங்கள் ராணுவ வீரர் இல்லை என்று பிரதமர் மோடி பேச்சைக் குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் சாடியுள்ளார்.

சமூக வலைதளத்தில் அரசியல் ரீதியாக என்ன நடந்தாலும், உடனுக்குடன் தன் கருத்துகளைத் தெரிவிப்பவர் நடிகர் சித்தார்த். சமீபத்தில் நடைபெற்ற புல்வாமா தாக்குதல் மற்றும் அபிநந்தன் விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துகளைத் தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார் சித்தார்த்.

இந்நிலையில், புல்வாமா தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனத்துக்கு பிரதமர் மோடி, "நாம் ராணுவத்தினரை நம்புவதும் நாம் அவர்களை நினைத்துப் பெருமைப்படுவதும் இயற்கையான ஒன்று. ஆனாலும் எனக்கு ஒன்று புரியவில்லை. ஏன் ராணுவப் படையினரை சிலர் கேள்வி கேட்கின்றனர்" என்று பொதுக்கூட்டமொன்றில் பேசினார்.

இந்தியப் பிரதமரின் ட்விட்டர் கணக்கில் இப்பேச்சை ட்வீட் செய்தார்கள். அதனைக் குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''நம் மக்கள் நம் நாட்டு ராணுவத்துடனும் ராணுவ வீரர்கள் பக்கமும்தான் நிற்கிறார்கள். நீங்களும் உங்கள் கும்பலைச் சேர்ந்தவர்களும்தான் நம்புவதில்லை. முதலில் புல்வாமாவை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்.

உண்மையான ஹீரோக்கள் பின்னால் ஒளிந்து கொண்டு நிஜ ஹீரோக்களாக பாசாங்கு செய்ய வேண்டாம். நீங்கள்தான் படையினரை மதிக்க வேண்டும். நீங்கள் ராணுவ வீரர் இல்லை, அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்''.

இவ்வாறு சித்தார்த் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்