அதிமுக, திமுக கூட்டணிகளுடன் நேரடியாக மோதும் அமமுக, கூட்டணிக்கு ஒதுக்கும் குறிப்பிட்ட தொகுதிகளைப் பிடிக்க, புதிய வியூகம் வகுக்கும் என, அக்கட்சி தரப்பில் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேர்தல் களம் களைகட்டியுள்ளது. தேசிய, மாநிலக் கட்சிகள் தங்களது கூட்டணியைப் பலப்படுத்துவதில் தீவிரம் காட்டுகின்றன.
அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிகள் ஏறக்குறைய இறுதியாகும் நிலையில், ஒருசில கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்துகின்றனர். தேமுதிக எங்கு என்பதைப் பொறுத்து ஓரளவு கூட்டணிக் கணக்கு முடிவாகும்.
இந்நிலையில் பெரிய கட்சிகள் இன்றி, ஒருசில கட்சிகளுடன் அமமுகவும், நாம் தமிழர் உட்பட சிறுகட்சிகள் தனித்து நிற்கும் சூழலும் உருவாகியுள்ளது.
இத்தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி மற்றும் அமமுகவுக்கு இடையே நேரடியான போட்டி நிலவும். மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளும் களத்தில் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும்.
பிற தேர்தல்களைவிட, இம்முறை கட்சியினர் தவிர, பிற வாக்குகள் பலவாறு பிரியவே அதிக வாய்ப்பு என கருதலாம். அமமுகவைப் பொறுத்தவரை சில கட்சிகளுடன் கூட்டணி பேசினாலும், கட்சியின் பொதுச் செயலர் என்ற முறையில் அவர், தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். மக்களவைத் தேர்தலைவிட, தமிழகத்தில் 21 சட்டப் பேரவை இடைத்தேர்தலை மனதில் வைத்தும், இத்தேர்தல் மூலம் தனக்கான ஓட்டு வங்கியை நிரூபிக்கவேண்டும்.
குறிப்பிட்ட தொகுதியைக் கைப்பற்றவேண்டும் என்ற இலக்கை முன்நிறுத்தியே டிடிவி தினகரன் செயல்படுகிறார் என, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அதிமுக, திமுகவுக்கு சவாலாகவே களம் இறங்கினாலும், அதிகாரம், பணபலத்தை மிஞ்சி, தேர்தலைச் சமாளிக்க அவர், பல்வேறு வியூகங்களை வகுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அதிமுக தொண்டர்கள் நம் பக்கம் என, நம்பும் டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு எதிராக தேர்தல் களம் அமைந்திடக் கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருக்கிறாராம்.
அதிமுக, திமுக தங்களது கூட்டணிக்கு ஒதுக்கும் தொகுதியை குறி வைக்கவும் அவர்கள் திட்டமிடுவதாகத் தகவல் வெளியாகிறது.
அத்தொகுதிக்கு பலம் வாய்ந்த வேட்பாளர்களை அவர் நிறுத்தவும் திட்டமிடுவதாகக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அமமுக நிர்வாகிகள் கூறியது:
''கூட்டணியைப் பற்றி கவலையில்லை. துணை பொதுச் செயலர் மக்களைச் சந்திக்கும் பயணத்தில் உள்ளார். எங்களது குறிக்கோள் தமிழக சட்டப்பேரவை தேர்தல்.
அதற்கான தேர்வாகவே மக்களவைத் தேர்தலை நினைக்கிறோம். மக்கள் மனதில் இருக்கிறோம் என்பதற்கு சென்னை ஆர்.கே. நகர் தேர்தல் வெற்றி உதாரணம். பிற கட்சியினரும் கவரும் தலைவராக டிடிவி தினகரன் உள்ளார். 38 தொகுதியில் போட்டியிடும் என்றாலும், கூட்டணியைப் பொறுத்து நம்பர் குறையலாம். எங்களது இலக்கு மக்களவையில் 15 தொகுதிக்கு மேல் எடுக்கவேண்டும்.
20 சதவீத வாக்குகளை எட்டவேண்டும். எல்லா தொகுதிக்கும் வேட்பாளர்களைவிட, குறிப்பிட்ட தொகுதி வேட்பாளருக்கான தேர்வில் துணை பொதுச் செயலர் மிகவும் கவனமாக வியூகம் வகுக்கிறார். ஒவ்வொரு தொகுதியிலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், ஒவ்வொரு பூத்துக்கும் 1000க்கும் மேற்பட்ட நபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை முறையாக தேர்தல் பணி செய்ய வைத்து இலக்கை அடைவோம்.
பண பலத்தை சமாளிக்க குவாரி போன்ற சில தொழில் அதிபர்களை புதிதாகக் களத்தில் இறக்குவது பற்றியும் யோசனை உள்ளது. அதிமுகவில் சில அமைச்சர்கள், நிர்வாகிகள் துரோகம் செய்தாலும், எங்கள் பக்கம்தான் தொண்டர்கள். அவர்களுக்கு எதிராக எங்களது தேர்தல் களம் இருக்காது என்பதில் டிடிவி உறுதியாக இருக்கிறார். எல்லா கட்சிக்கும் சவாலாக இருக்கும் இத்தேர்தல் எங்களது பலமும் தெரியும்''.
இவ்வாறு அமமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago