மத்திய அரசு வழிகாட்டுதலின்படி ‘ஒன் ஸ்டாப் சென்டர்’களில் மருத்துவர், வழக்கறிஞர், காவல் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிகள் கிடைப்பதில் தாமதம்

By மு.யுவராஜ்

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஒன் ஸ்டாப் சென்டர்களில் மருத் துவர், வழக்கறிஞர், காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்படாததால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மத்திய பெண்கள் மற்றும் குழந் தைகள் மேம்பாட்டு நல அமைச்சகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஒரே இடத்தில் தீர்வு காண நாடு முழுவதும் ஒன் ஸ்டாப் சென்டரை உருவாக்கியது.

தமிழகத்தில் தாம்பரம், காஞ்சி புரம், கோயம்புத்தூர், சேலம், மதுரை, திருச்சி ஆகிய 6 இடங் களில் ஒன் ஸ்டாப் சென்டர்கள் செயல்பட்டு வருகிறது. குடும்ப வன்முறை,

பாலியல் வன்கொடுமை, அமில தாக்குதல், மனிதக் கடத்தல் உள் ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப் படும் பெண்களுக்கு ஒரே இடத் தில் தீர்வு காண ஒன் ஸ்டாப் சென்டர்கள் தொடங்கப்பட்டன.

மத்திய அரசு உருவாக்கிய வழி காட்டுதலின்படி, ஒன் ஸ்டாப் சென் டரில் ஷிப்ட் முறையில் 2 காவல் துறை அதிகாரிகள், வழக்கறிஞர், மருத்துவர் பணி அமர்த்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் ஒன் ஸ்டாப் சென்டர்களில் ஒரு தொழில் நுட்ப வல்லுநர், சமையலர், வழக்கு களை கையாள 2 கேஸ் ஒர்க்கர்ஸ் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

இதனால், ஒன் ஸ்டாப் சென்ட் ருக்கு வரும் பெண்களுக்கு முழுமை யான தீர்வு கிடைப்பதில்லை. இந் தச்  சூழலில், மாவட்டத்துக்கு ஒன்று வீதம் 26 ஒன் ஸ்டாப் சென்டர்களை ரூ.12 கோடியே 48 லட்சம் செல வில் அமைக்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நல அமைச்சகம் ஒப்புதல் வழங்கி யுள்ளது.

சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்புபுதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒன் ஸ்டாப் சென்டர்களுக்காவது காவல்துறை அதிகாரிகள், வழக் கறிஞர், மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் கள் சிலர் கூறியதாவது:

காவல்துறை அதிகாரிகள் நிய மிக்கப்பட்டால் எப்ஐஆர் உடனடி யாக போட முடியும். மருத்துவர்கள் நியமிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கலாம்.

தற்போது, பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்க மையத் துக்கு அருகில் உள்ள மருத்துவ மனைக்கும், புகார்கள் பதிவு செய்ய காவல் நிலையத்துக்கும் அழைத்துச்  செல்கின்றனர்.

உடனடி நியமனம்

தனி வழக்கறிஞர்கள் இல்லாத தால் கட்டணம் இன்றி சமூக சேவை செய்யும் வழக்கறிஞர்களை அணுகி வழக்குகளை நடத்துகின்றனர். இதனால், பாதிக்கப்பட்ட பெண் களுக்கு உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஒன் ஸ்டாப் சென்டர்கள் சிறப் பான முறையில் செயல்பட்டு வருகின்றன. 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன் ஸ்டாப் சென்டர் களால் பயன் அடைந்துள்ளனர். காவல்துறை அதிகாரி, மருத்துவர், வழக்கறிஞரை உடனடியாக நியமிக்கும் திட்டம் இல்லை. விரைவில் நியமனம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்