நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் திருச்சி அமைச்சர்களின் பெயர் இல்லை: 32 அமைச்சர்களில் 6 பேர் மட்டும் சேர்க்கப்படவில்லை

By அ.வேலுச்சாமி

அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில், அமைச்சரவையில் உள்ள 32 பேரில் 26 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், திருச்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி நட்சத்திர பேச்சாளர் தகுதியுடைய தலை வர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது அவருக்கான போக்குவரத்து செலவுகள், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படாமல், கட்சியின் கணக்கில் சேர்க்கப்படும். அந்த வகையில் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் 40 பேரையும், அங்கீகாரமற்ற கட்சிகள் 20 பேரையும் நட்சத்திர பேச்சாளர் களாக நியமிக்கலாம். இதன்படி, தற்போதைய மக்களவை, இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் 40 பேர் கொண்ட பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டது.

அதில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 24 அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், திருச்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்(சுற்றுலாத்துறை), எஸ்.வளர்மதி(பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் துறை) மற்றும் கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகிய 6 பேர் மட்டும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

இதுகுறித்து திருச்சி அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘திருச்சியை சேர்ந்த 2 அமைச்சர்களுக்கு கட்சியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் பெரியளவில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஏற்கெனவே முக்கொம்பில் மேலணை சீரமைப்பு பணிகளை இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மேற்பார்வையில் விடாமல், கரூரைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விட்டிருந்தனர்.

தற்போது வெளியிட்டுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலிலும் இவர்கள் இருவரின் பெயரையும் சேர்க்கவில்லை. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அரசியலில் நீண்ட அனுபவம் உடையவர். ஆனாலும் அவர் பெயர் ஏன் சேர்க்கப்படவில்லை எனத் தெரியவில்லை’’ என்றனர்.

இதுகுறித்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, ‘‘அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, மாவட்டச் செயலாளர்களான எம்.பி.க்கள் ப.குமார், டி.ரத்தினவேல் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஆளுக்கொரு திசையில் பயணிக் கின்றனர். தேர்தல் பணிகள் நடைபெறும்சூழலில் அண்மையில்கூட ஒரு தரப்பினர், எதிர் தரப்பு மீது புகார் தெரிவிக்க முதல்வர் வீட்டுக்கு வந்திருந்தனர். ஒற்றுமையின்றி செயல்படுவதால் திருச்சி நிர்வாகிகள் மீது முதல்வருக்கு சற்று வருத்தம் உள்ளது. எனவேதான் இத்தொகுதியை அதிமுகவினருக்கு கொடுக்காமல், கூட்டணிக்கு விட்டு கொடுத்துவிட்டார். இதன் தொடர்ச்சி யாகவே, தற்போது தயாரிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் திருச்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்களையும் சேர்க்காமல் விட்டிருக்கலாம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்