இடைத்தேர்தல் வெற்றிக்காக அமமுக நிர்வாகிகளை ‘பணத்தால்’ வளைக்கும் அதிமுக, திமுகவினர்

By சுப.ஜனநாயக செல்வம்

சட்டப் பேரவை இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வெற்றியை வசமாக்க அதிமுக, திமுகவினர் அந்தந்த தொகுதிகளில் உள்ள அமமுக நிர்வாகிகளை ‘பணத்தால்’ வளைக்கும் இறுதிக்கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்களவைப் பொதுத் தேர்தலோடு, தமிழகத்தில் 18 சட்டப் பேரவைத் தொகுதி களுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளன. அதிமுக அரசு பெரும்பான்மையைப் பெற 8 இடங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க பல வகையிலும் திமுக முயற்சி செய்து வருகிறது. இதனால் 18 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுக, திமுக கடும் முயற்சி செய்து வருகின்றன.

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதிகளை அதிமுக, திமுகவினர் அளித்து வருகின்றனர். இருந்தாலும் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டியைத் தரும் வகையில் அமமுக உள்ளது. எனவே இக்கட்சி நிர்வாகிகளை ‘பணத்தால்’ வளைத்துப் போடும் வேலையில் அதிமுக, திமுகவினர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அமமுக வினர் கூறியதாவது: வெற்றிக்காகஅதிமுக, திமுக பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றன. இதில் மக்களைச் சந்திப்பதோடு, தொகுதியில் தீவிரமாக வாக்குச் சேகரிக்கும் அமமுக நிர்வாகிகளை ‘பணத்தால்’ வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் எங்கள் நிர்வாகி களுக்கு ஒரு இக்கட்டானச் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளித்து இடைத்தேர்தலில் வெற்றி பெறக் கடுமையாக உழைப் போம் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்