பொள்ளாச்சி பாலியல் கொடுமை: சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் - தமிழிசை சவுந்தர ராஜன்

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில்  சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக  பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி, தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்தச் சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தச் சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன்

”பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது,பெண்ணினம் கசக்கப்படுவதையும்..நசுக்கப்படுவதையும்..துளியும்,ஏற்றுக்கொள்ள முடியாது,பாதிக்கப்பட்டபெண்கள் பாதுகாக்கப்படவேண்டும் சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்,சிறப்பு புலனாய்வு வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்