திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும் ஒதுக்கப்படும் இரண்டு தொகுதிகள் எவை என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளை திமுக வழங்கியது. ஆரம்பத்தில் தேமுதிக வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தலா 1 தொகுதி என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் தேமுதிக இழுத்தடிக்கவே கூட்டணிகட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கி கூட்டணிப்பேச்சு வார்த்தையை முடித்துவைத்தது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இடதுசாரிகள் கேட்கும் தொகுதிகளும் ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மதுரை, கோவை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வடசென்னை உள்ளிட்ட இடங்களை கேட்டுள்ளதாகவும், அதில் திமுக தரப்பில் மதுரை, கோவை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என திமுக வட்டார தகவல் தெரிவிக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தென்காசி, கோவை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 தொகுதிகள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தென்காசியும், நாகப்பட்டினமும் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago