வாக்காளர்களை கவரும் நடனக் கலைஞர்கள்: ‘சின்ன எம்ஜிஆர்னா சிலிர்க்குது உடம்பு’

By ந.முருகவேல்

கோயில் திருவிழாக்கள், உணவுவிடுதிகளில் மட்டுமே நடத்தப்பட்டுவந்த ஆடல் - பாடல் நிகழ்ச்சிகள், தற்போது வாக்காளர்களை வசீகரிக்கும் வகையில், அரசியல் கட்சிமேடைகளிலும் பரவலாக நடத்தப்பட்டு வருகிறது.

கோயில் திருவிழாக்களில் ஆடல் - பாடல் நிகழ்ச்சிகள் நடத்தஉயர் நீதிமன்றம் 2014-ல் தடை விதித்தது. இதனால் மனம் தளர்ந்திருந்தஇந்த கலைஞர்களுக்கு கட்சி மேடைகள்தான் ஆபத்பாந்தவனாக மாறின. மிதமிஞ்சிய ஒப்பனைகளுடன் ஆடும் நடனங்கள் மூலம் கடைநிலை வாக்காளர்களை எளிதில் கவர முடியும் என்பதால் இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் தனி மவுசு.

நடனக் கலைஞர்கள் மூலம் வாக்காளர்களைக் கவரும் முயற்சியில் திமுக, அதிமுக வரிசையில் தற்போது அமமுகவும் இணைந்துள்ளது. அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சமீபத்தில் ‘மக்கள் சந்திப்பு’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மகளிர் அணியினரின் முளைப்பாரி ஊர்வலத்தோடு, தப்பாட்டம், குதிரையாட்டம், கரகாட்டம் என தனது பயணத்தை களைகட்ட வைத்தார்.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்ட மேடையில், ‘உரிமைக்குரல்’ பிரச்சாரக் கலைக்குழுவைச் சேர்ந்த பாலமுருகன் - சித்ரா தம்பதியர் எம்ஜிஆர் - ஜெயலலிதா தோற்றத்தில் ஆடிப்பாடிபார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த பாலமுருகன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

என் தாத்தா, அப்பா நாடக நடிகர்கள். தொடர்ந்து நானும் அதே தொழிலை செய்கிறேன். எம்ஜிஆர் வேடத்தில் என் நடிப்பைப் பார்த்து வியந்துதான் என்னை திருமணம் செய்துகொண்டார் தற்போது ஜெயலலிதா தோற்றத்தில் இருக்கும் என் மனைவி சித்ரா.

நாங்கள் அதிமுக கலைக்குழுவின் அங்கத்தினர்கள். அதிமுகநிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்போம், மற்ற கட்சிகளுக்கு செல்வதுஇல்லை. சில சமயம், சிவாஜி வேஷம் போட்டாலும், ரசித்து செய்வது எம்ஜிஆர் வேஷம்தான்.

பார்ப்பவர்கள் என்னை ‘சின்ன எம்ஜிஆர்’ என்று கூப்பிடும்போது உடம்பே சிலிர்க்கும்.

வருமானம் கைக்கும் வாய்க்கும்பத்தாவிட்டாலும், தேர்தல் நேரத்தில்நிகழ்ச்சிகள் மூலம் ஓரளவு சமாளிக்கிறோம். எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என்று ஜெயலலிதா கூறினார். அது இதுவரை நிறைவேறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்