அதிமுக என்.ஆர்.காங்கிரஸுடன் வைத்துள்ள கூட்டணியை ஜெயலலிதாவின் ஆவி கூட மன்னிக்காது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜ் நகர் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரி பொறுப்பாளர் சஞ்சய் தத், முதல்வர் நாராயணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
''புதுச்சேரியில் திட்டங்களை நிறைவேற்ற தினமும் பிரதமர் மோடியாலும், ஆளுநர் கிரண்பேடியாலும் முட்டுக்கட்டை உள்ளது. வாய் திறக்கா எதிர்க்கட்சி தலைவராக ரங்கசாமி உள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸைத் தொடங்கி மாநில அந்தஸ்து பெறுவேன் என அதிமுகவுடன் கூட்டணி அமைத்து புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சிக்கு வந்தார். அப்போது கூட்டணியின்போது அதிமுகவுக்கு அமைச்சரவையில் 2 இடம் கொடுப்பேன் என்று உறுதியளித்துவிட்டு, வெற்றி பெற்றவுடன் அதிமுகவை தூக்கி எறிந்து அமைச்சரவை அமைத்தார். இதனால் 2011ல் ஜெயலலிதா என்.ஆர்.காங்கிரஸை துரோகி என்று குற்றம் சாட்டினார்.
2016 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போதும் முதுகில் குத்திய ரங்கசாமியை மன்னிக்க மாட்டேன் என்றார். தற்போது அதிமுக என்.ஆர்.காங்கிரஸுடன் வைத்துள்ள கூட்டணியை ஜெயலலிதாவின் ஆவி கூட மன்னிக்காது. . தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்கின்றார் என்று கூறி ஆளுநரிடம் மனு அளித்த ராமதாஸ், தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார். அது சந்தர்ப்பவாத கூட்டணி''.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago