விபத்துகளை தடுக்க நடவடிக்கை: முக்கிய சாலைகளின் நடுவில் தடுப்புகளை மாற்றியமைக்க முடிவு - நெடுஞ்சாலைத்துறை திட்டம்

By செய்திப்பிரிவு

விபத்துகளை தடுப்பதற்காக சென்னையில் முக்கிய சாலைகளின் நடுவே உள்ள தடுப்புச் சுவர்களை (சென்டர் மீடியன்) மாற்றியமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் விபத்துகளை தவிர்க்கவும் அண்ணா சாலை, பூந்த மல்லி நெடுஞ்சாலை, வால்டாக்ஸ் சாலை, ஆற்காடு சாலை, ஆவடி சாலை உட்பட பல்வேறு சாலைகளின் நடுவில் சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், செடிகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சென்டர் மீடியன்கள் சற்று அகலமாக இருப்பதால், சிலர் இரவில் அதில் படுத்து தூங்குகின் றனர். அதுமட்டுமின்றி இளைஞர் கள் அதில் அமர்ந்து அரட்டை அடிக்கின்றனர். இதனால், போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படு வதுடன் விபத்துகளும் நடக் கின்றன. எனவே, சென்டர் மீடியன் அமைப்பை மாற்ற நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

தற்போதுள்ள சென்டர் மீடியன்க ளில் இடம் அதிகம் இருப்பதால், சிலர் அதில் தூங்குகிறார்கள். மேலும், இதற்கான பராமரிப்பு செலவும் அதிகமாகிறது. இதனால், முக்கியமான சாலை களில் உள்ள சென்டர் மீடியன் களை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, ‘கிராஸ் பேரியர்’ என்ற புதிய வகை சென்டர் மீடியன் கள் அமைக்கப்பட உள்ளது. இது 4 அடி உயரம் இருக்கும். அகலமும் குறைவாக இருக்கும். இதனால், அதில் யாரும் நிற்கவோ அமரவோ முடியாது.

ரூ.3 கோடி செலவாகும்

முதல்கட்டமாக அண்ணா சாலை (நந்தனம் முதல் சைதாப்பேட்டை வரை), பூந்தமல்லி நெடுஞ்சாலை, வால்டாக்ஸ் சாலை ஆகிய இடங்களில் இந்த புதிய வகை சென்டர் மீடியன்களை அமைக்க உள்ளோம். இதற்கு சுமார் ரூ.3 கோடி செலவாகும் என மதிப் பிட்டுள்ளோம். அடுத்த கட்டமாக மேலும் சில சாலைகளை தேர்வு செய்து அங்கும் இந்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE