விழுப்புரம் கூவாகம் திருவிழா வருவதால் தேர்தல் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என மதுரை ஆட்சியரிடம் திருநங்கை பாரதி கண்ணம்மா மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தேதியில், 18 சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த திருநங்கைகள் செயற்பாட்டாளர் பாரதி கண்ணம்மா மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார்.
இவர், 2014 மக்களவை தேர்தலில் மதுரையில் சுயேச்சையாக போட்டியிட்டார். அதன் பிறகு சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்தார். தற்போது அதிலிருந்தும் விலகிவிட்டார்.
அவர் அளித்த மனுவில், "தேர்தல் தேதியை இரண்டு காரணங்களுக்காக எங்களால் ஏற்க இயலவில்லை.
முதலில், சித்திரைத் திருவிழாவை ஒட்டி நிறைய பேர் மதுரைக்கு வருவார்கள். இதனால் இவர்களால் தங்கள் வாக்குரிமையை செயல்படுத்த இயலாமல் போகும்.
இரண்டாவதாக ஏப்ரல் 15 முதல் 17 வரை விழுப்புரத்தில் கூத்தாண்டவர் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் 6.5 லட்சம் திருநங்கைகள் பங்கேற்பார்கள். அவர்களால் மறுநாளே அவரவர் ஊருக்கு திரும்பி வாக்களிக்க இயலாது.
தேர்தல் தேதியை மாற்றாவிட்டால் திருநங்கை சமூகத்தை புறக்கணித்ததாக ஆகிவிடும். எ
னவே தேர்தல் தேதியை மாற்றியமைக்க ஆணையம் பரிசீலிக்க வேண்டும் எனக் கோருகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
எல்லா மதத்தினரும் எதிர்ப்பு:
மதுரையில் ஏப்ரல் 8 தொடங்கி 22 வரை சித்திரை திருவிழா நடைபெறுவதால் தேர்தல் தேதியை மாற்றக் கோரி கடந்த 12-ம் தேதி நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து மார்ச் 14-ம் தேதியன்று தமிழக பிஷப் கவுன்சில் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் புனித வியாழன் தினத்தன்று தேர்தல் வருவதால் கிறிஸ்துவர்கள் வாக்களிக்க வருவதில் சிக்கல் ஏற்படும் எனக் கூறியிருந்தார்.
அதேபோல், ரம்ஜான் நோன்பு காலத்தை சுட்டிக்காட்டியும் சில தலைவர்கள் மக்களவைத் தேர்தல் தேதிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் ஏப்ரல் 11 தொடங்கி, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 என 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 23-ம் தேதி என கணக்கிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago