தமிழக அரசுத் துறைகளின் தீவிரமுயற்சியால், சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 2018-ல் 24 சதவீதம் குறைந்துள்ளது. அதிக விபத்துகள் நடக்கும் 265 இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 63,920 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 12,216 பேர் உயிரிழந்தனர். இதில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட விபத்துகள் நெடுஞ்சாலைகளில் நடந்துள்ளன. ஓராண்டில் சாலைகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை இழப்பது வேதனையானது.
அதேசமயம், தமிழகத்தில் சாலை விபத்துகள் மற்றும் அதன்காரணமாக ஏற்படும் உயிர்ச் சேதத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து, காவல், சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால், விபத்துகள், உயிரிழப்புகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. தமிழகத்தில் 2016-ல் நடந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,218 என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் தாண்டிச் செல்லுதல், சரக்கு வாகனங்களில் அதிக சரக்குகளை ஏற்றுதல், அனுமதியின்றி நபர்களை ஏற்றுதல், மது அருந்தியோ, செல்போனில் பேசிக்கொண்டோ வாகனம் ஓட்டுதல் போன்றவை விபத்துக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வையும் தமிழக அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
அதிக விபத்துகள் நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்படுகின்றன. இதனால், சாலை விபத்துகள் 2.50 சதவீதமும், விபத்து இறப்புவீதம் 24.39 சதவீதமும் குறைந்துள்ளன.
இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை ஆணையர் சி.சமயமூர்த்தி மேலும் கூறியதாவது:தமிழகத்தில் சாலை விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க தமிழகஅரசு தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாலை பாதுகாப்பு நிதி மூலம் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, விதி மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்.
விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களில், பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் சுகாதாரத் துறை மூலம் மருத்துவமனைகள் இடையே தொடர் இணைப்பை ஏற்படுத்தியுள்ளோம். காயம்அடைந்தவர்களை கொண்டுவரும்போதே, அவர்களது நிலையை அறிந்து உடனே சிகிச்சை அளிக்க,அருகே உள்ள மருத்துவமனைகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் தொடர் நடவடிக்கையால் விபத்து, உயிரிழப்புகள் குறைந்து வருகின்றன. கடந்தஆண்டில் மட்டும் 24 சதவீத உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.
விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு வேகத்தடை, உரிய தடுப்புகள், சிவப்பு ஒளிர்பட்டைகள், தேவையான இடங்களில் சிறிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
265 இடங்கள் தேர்வு
தேசிய, மாநில நெடுஞ்சாலை களில் தொடர்ச்சியாக 10 விபத்துகள் நடந்துள்ள இடங்கள், அதிக விபத்து நடந்த இடங்களாக தேர்வு செய்யப்படுகின்றன. இவ்வாறு, கடந்த ஆண்டில் மாநிலநெடுஞ்சாலைகளில் 169 இடங்களும், தேசிய நெடுஞ்சாலைகளில் 96 இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் விபத்துகளை தடுக்க உடனடியாக எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படுகின்றன. வாகனத்தின் வேகத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. நிரந்தர தீர்வு காணும் வகையில் சிறிய பாலங்கள் அமைத்தல், தேவையான இடங்களில் சாலையில் மாற்றங்களை செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago