மனிதனை சகமனிதனே துண்டு துண்டாக கூறு போடுவதற்கு உச்சகட்ட விரக்தியே காரணம்: ஓமனா வழக்கை விசாரித்த காவல் அதிகாரியின் அனுபவப் பகிர்வு

By என்.சன்னாசி

மனிதனை சகமனிதனே துண்டு துண்டாக கூறு போடுவதற்கு உச்சகட்ட விரக்தியே காரணம் என ஓமனா வழக்கை விசாரித்த காவல் அதிகாரி தனது விசாரணை அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

சென்னையில், துணை நடிகை சந்தியாவை அவரது கணவரும் திரைப்பட இயக்குநருமான பாலகிருஷ்ணனே கொன்று, உடல் பாகங்களைத் துண்டு துண்டாக்கி வீசியதாக வெளிச்சத்துக்கு வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

ஆனால் இத்தகைய சம்பவம் தமிழகத்துக்குப் புதிதல்ல. இதேபோன்று கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்தது.

கேரளாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஓமனா தனது ஆண் நண்பரின் தொந்தரவு தாங்காமல் அவரைக் கொலை செய்து, உடல் பகுதிகளைத் துண்டு துண்டாக வெட்டி, கொடைக்கானலில் வீசிவிட்டுத் தப்பிக்க முயன்றபோது போலீஸில் சிக்கினார்.

சவாலான ஓமனாவின் வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடித்தவர் அப்போதைய கொடைக்கானல் காவல் ஆய்வாளர்  கலைமோகன். அவர் மதுரை காவல் உதவி ஆணையராகி, தற்போது ஓய்வும் பெற்றுவிட்டார்.

சந்தியா வழக்கு தற்போது பரபரப்பாகியுள்ள சூழலில் கலைமோகன் தனது விசாரணை அனுபவம் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

"1998-ல் கொடைக்கானல் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்தேன். அப்போது இந்த சவாலான வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடித்தேன்.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பொறியியல் டிப்ளமோ படித்த ஒருவர் தனது நண்பர்களுடன் ஜாலியாகப் பேசியபோது,  ஓமனா என்ற பெண் மருத்துவரை உன்னால் வசப்படுத்த முடியுமா? என, நண்பர்கள் பந்தயம் கட்டியுள்ளனர்.

இதை சவாலாக எடுத்துக் கொண்ட அந்தப் பொறியாளர் ஓமனாவிடம் சிகிச்சை பெறுவது போல் அவரை தன் வசப்படுத்தினார். அவருடன் எடுத்த புகைப்படத்தை நண்பர்களிடம் கொடுத்து வெளியில் பரவச் செய்தார்.

இதனால்  ஓமனா பெரும் அவமானத்தைச் சந்தித்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறியாளரை அழைத்து சமரசம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போதும்கூட அந்த நபர், ஒருநாள் மட்டும் எனக்கு இணக்கமாக நடக்க வேண்டும் என்ற கட்டாயப்படுத்த வேறுவழியின்றி ஓமனா ஒப்புக்கொண்டுள்ளார்.

அதற்குப் பின் எல்லாம் முடிந்துவிடும் என ஓமானா நினைக்க பொறியாளரோ தொந்தரவு கொடுப்பதை நிறுத்தவேயில்லை.

இதைத் தாங்க முடியாமல் மலேசியாவைச் சேர்ந்த மருத்துவ நண்பர் ஒருவர் மூலம், ஓமனா மலேசியாவுக்குச் சென்று, அரசு மருத்துவரானார்.

இதை அறிந்த பொறியாளர் மலேசியாவுக்கு சென்று ஓமனாவை விடாமல் துரத்தினார். ஓமனாவின் பாஸ்போர்ட்டை ஒளித்து வைத்துவிட்டு, கொல்லம் திரும்பினார் பொறியாளர்.

ஓமனா மனநிலை பாதிக்கப்பட்டவர். அவருக்கு எப்படி அரசுப் பணி வழங்கப்பட்டது என்று மலேசிய அரசுக்கு பொறியாளர் கடிதம் போட ஓமனாவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில்தான் ஓமனா, அந்த நபரை தீர்த்துக் கட்ட முடிவெடுத்து, அவருக்கு போன் செய்தார்.

ஏற்கெனவே திட்டமிட்டபடி, ஊட்டிக்கு அவரை வரவழைத்தார். அங்கு ஒருநாள் பொறியாளருடன் தங்கினார். ஊட்டி ரயில்வே துறை விடுதிக்கு அவரை அழைத்துச் சென்ற ஓமனா அங்கு மயக்க மருந்து கொடுத்து, அவரைக் கொலை செய்தார்.

கறிக்கடையில் வெட்டுவது போன்று, உடலைத் தோலுரித்து உடல் பாகங்களைத் துண்டு துண்டாக்கி தனித்தனியே பிளாஸ்டிக் பேக்கில் பார்சல் செய்தார். பின்னர் அங்கிருந்து கொடைக்கானல் வந்தார். சூட்கேஸில் வைத்திருந்த உடல் பாகங்களை கொடைக்கானல் சூஸைட் பாயின்ட்டில் வீச முயன்றார்.

அதற்கு வாய்ப்பில்லாமல் போனதால் கன்னியாகுமரி கடலில் வீசுவதற்கு வேன் மூலம் எடுத்துச் சென்றபோது, 2 நாட்கள் ஆனதால் வழியில் துர்நாற்றம் ஏற்பட்டது.

சந்தேகித்த வேன் ஓட்டுநர், அது பற்றிக்கேட்டபோது, தனக்கு மாதவிடாய் இருப்பதாகக் கூறி சமாளித்தார். நாற்றம் அதிகமாகவே கொடைக்கானலில் ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல்  நிரப்புவது போன்று, வேன் ஓட்டுநர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.

இதை அறிந்த ஓமனா காட்டுப் பகுதிக்குள் தப்பினார்.  பிறகு சூட்கேஸ் பார்சலைப் பிரித்தபோது, மனித உடல் துண்டு துண்டாக இருப்பது கண்டு அதிர்ந்தோம்.

அன்றிரவே ஓமனாவைப் பிடித்தோம். இரண்டு நாள் விசாரணைக்குப் பின், கொலைக்கான பின்னணி பற்றி அவர் தெரிவித்தார். அவரைக் கைது செய்து, ஊட்டி போலீஸாரிடம் ஒப்படைத்தோம்.

இச்சம்பவம் போன்றே இயக்குநர் பாலகிருஷ்ணனும் தனது வாழ்கையில் மனைவியால் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினை, அவமானங்களைத் தாங்க முடியாமல் உச்சகட்ட விரக்தியால் சந்தியாவைக் கொலை செய்து,  உடல் பாகங்களை சாக்கு மூட்டையில் கட்டி குப்பையில் வீசி இருக்கலாம் என்றே தோன்றுகிறது" என்றார் கலைமோகன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்