பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண் குழந்தைகள்

By த.சத்தியசீலன்

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர், பெண் குழந்தைகள். இவர்களைப் பாதுகாப்பது யார்? என்று கேள்வி எழுப்புகின்றனர், சமூக ஆர்வலர்கள்.

மேட்டுப்பாளையம் அருகே தனியார் மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி படித்து வரும் 4 வயது சிறுமி, பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு பள்ளி பேருந்தில் திரும்பிய போது, ஓட்டுநர் கோவிந்தராஜ் (37), நடத்துநர் மாரிமுத்து (55) ஆகியோரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.

விசாரணையில், 'பள்ளி பேருந்தில் அந்த சிறுமி கடைசியாக இறங்குவாளாம். இதை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட கோவிந்தராஜூம், மாரிமுத்துவும், நேற்று முன்தினம் அனைத்து குழந்தைகளும் அவர்களின் இருப்பிடம் வந்திறங்கியதும், சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் துன்புறுத்துலுக்கு உள்ளாக்கியது' தெரியவந்தது.

இதுபோன்ற கொடூர எண்ணம் கொண்ட கயவர்களிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது யார்? பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பாதுகாப்பு? என்றும் கேள்வி எழுகிறது.

உளவியல் ஆலோசனை

கோவை அரசு கலைக்கல்லூரி உளவியல் துறை உதவிப் பேராசிரியை எஸ்.ராஜகுமாரி கூறியதாவது:3 வயதிலே குழந்தைகளுக்கு சரியான தொடுதல், தவறான தொடுதல் எது? என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இதற்கு பள்ளிகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் குழந்தைகளை யாரேனும் தவறான எண்ணத்தில் தொடும்போது, பாலியல் துன்புறுத்தல்கள் செய்தாலோ வெளியில் சொல்வார்கள். இல்லாவிட்டால் குழந்தைகள் அதை விளையாட்டாக எடுத்துக் கொள்வார்கள். அது பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

சிறு வயதில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு, அச்சம்பவம் ஆறாத வடுவாக மாறக்கூடும். அது பின்னாளில் அவர்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

எதுவானாலும் மறைக்காமல் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தன்னம்பிக்கையை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். இதற்கு குழந்தைகளுக்காக பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியம்.

பெற்றோர் பணிக்கு செல்பவர்கள் என்றால் தந்தை அல்லது தாயின் பெற்றோர் வசம் விட்டுச் செல்வது மிகவும் சிறந்தது. அந்நியர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் விட்டுச் செல்லக்கூடாது. குறைந்தது 5 வயது வரையிலாவது குழந்தைகளை பெற்றோர் தங்கள் அரவணைப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பள்ளிகளுக்கு ஓட்டுநர் மற்றும் உதவியாளரை உடற்தகுதியை அடிப்படையாகக் கொண்டு நியமிப்பதைப் போல, அவர்களை மன தகுதியையும் உளவியல் சோதனைக்கும் உட்படுத்துவது அவசியம். அவ்வாறு சோதனை செய்யும் போது, அவர்களின் உளவியல் தெரிந்துவிடும். இதுபோன்ற நபர்கள் இருப்பின் அவர்களைத் தவிர்த்து விடலாம். பள்ளி பேருந்துகளில் உதவியாளராக பெண்களை நியமிப்பதும் ஒருவகையில் பாதுகாப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டம் சொல்வதென்ன?“பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம் 2012-ல் இயற்றப்பட்டது. உட்செலுத்தும் பாலியல் தாக்குதல், பாலியல் உள்நோக்கத்துடன் குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளைத் தொடுவது, அவர்களிடம் பேசுவது, ஒலி எழுப்புவது, ஆபாச படமெடுப்பது போன்றவவை பாலியல் துன்புறுத்தலின் பாற்படும்.

உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், தத்து எடுத்தவர்கள், வளர்ப்பு பெற்றோர், ஒரே வீட்டில் வசிப்பவர், குழந்தையைப் பராமரிப்பவர்கள், கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோர், அக்கம் பக்கத்தினர், குழந்தைகளுடன் தொடர்பில் இருப்பவர்கள், அறிமுகமில்லாதவர்களால், குழந்தைகள் பாலியல் துன்புறத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.

குழந்தைகள் மீதான பாலியல் புகார்களை காவல்துறை, சிறப்பு சிறார் காவல் அலகு, பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அலுவலர், குழந்தைகள் நலக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு போன்றவற்றில் புகார் அளிக்கலாம்” என்கின்றனர், சைல்டு லைன் அமைப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்