குற்றாலத்தில் காதலியுடன் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா குட்டகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் கார்த்திக் ராஜா 18). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் குற்றாலத்துக்கு வந்தனர். கடந்த ஒன்றாம் தேதி குற்றாலத்தில் உள்ள ஒரு விடுதியில் இவர்கள் வாடகைக்கு அறை எடுத்து தங்கினர். இந்நிலையில் இரண்டாம் தேதி அதிகாலையில் விடுதி அறையில் கார்த்திக் ராஜா சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடனிருந்த மாணவியிடம் விசாரணை நடத்தியபோது இரவில் மது அருந்துவிட்டு கார்த்திக் ராஜா தகராறு செய்ததாகவும் இதை கண்டித்ததால் தான் தூங்கிய பின்னர் கார்த்திக் ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
கார்த்திக் ராஜா மரணமடைந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கார்த்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றாலத்துக்கு வந்தனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கார்த்திக் ராஜாவின் தந்தை புகார் மனு அளித்துள்ளார். அதில் கார்த்திக்ராஜா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கார்த்திக்ராஜா மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறினர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago