சாத்தூர் அருகே நேற்று பிற்பகலில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந் தனர். ஆலையில் இருந்த அறைகள் அனைத்தும் தரைமட்டமாகின.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குகன் பாறை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள வரகனூர் நெல்லை மாவட்டத் தைச் சேர்ந்த பகுதியாகும். இங்கு அய்யாசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது.
நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணியில் இருந்தனர். பல இடங்களில் விதிகளை மீறி அறைகளுக்கு வெளியே வைத்து பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படு கிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் ஃபேன்ஸி ரக பட் டாசுகள் தயாரிக்க அனுமதி இல்லை. ஆனால், இந்த ஆலையில் விதிகளை மீறி 7 அறைகளில் ஃபேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. மேலும், அறைகளுக்கு வெளியே திறந்த வெளியில் அமர்ந்தும் ஏராளமான தொழிலாளர் கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, பட்டாசு மருந்து கலக்கும் அறை யில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடித்துச் சிதறியது. தீப்பொறி பறந்து அடுத்தடுத்து இருந்த அறைகளிலும் அறைகளுக்கு வெளியே குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளிலும் விழுந்ததில் அவை பயங்கரமாக வெடித்துச் சிதறின. இதில், ஆலையில் உள்ள அனைத்து அறைகளும் இடிந்து தரைமட்டமாகின.
இந்த விபத்தில் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலைச் சேர்ந்த சின்னப்பன் மகன் நீதிராஜ் (50), ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த ஜெயக்கண்ணன் மனைவி கஸ்தூரி (45), வரகனூரைச் சேர்ந்த அன்னராஜ் மனைவி கிருஷ்ணம்மாள் (55), குருசாமி மனைவி மாரியம்மாள் (48) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.
ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த கணபதி மனைவி குருவம்மாள் (55), சின்ன மாரியப்பன் மனைவி சங்கரேஸ்வரி (47), தமிழ்மணி மனைவி கருப்பாயி (54), வரகனூரைச் சேர்ந்த சந்தனமாரி மனைவி கிருஷ்ணம்மாள் (55), திருத்தங்கல் பாறையடி ராஜாமணி மகன் சரவணன் (37), திருத்தங்கல் கேகே நகர் பெரியசாமி (50) ஆகிய 6 பேர் படுகாய மடைந்தனர். இவர்கள் சிவகாசி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பட்டாசு ஆலையில் நிறுத்தி இருந்த 2 வேன் கள், ஒரு கார், ஒரு பைக் ஆகியன தீயில் கருகின. விபத்து நடந்த பட்டாசு ஆலையை தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சில்பா பிர பாகர் சதீஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.என்.அருண்சக்திகுமார், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விபத்து குறித்து திருவேங்கடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 secs ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago