ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (பிப்.18) தீர்ப்பை அறிவிக்க உள்ளது. இதையடுத்து தூத்துக்குடியில் 1,600 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22-ம் தேதி நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு உத்தரவுப்படி மே 28-ம் தேதி ஆலை மூடி சீல்வைக்கப்பட்டது.
அரசின் நடவடிக்கையை எதிர்த்தும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஆலையைத் திறக்க கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி உத்தரவிட்டது.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உடனே அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை நீதிபதிகள் ஆர்.பாலி நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளும் இந்த மனுக்களோடு சேர்த்து விசாரிக்கப்பட்டன.
பலத்த பாதுகாப்பு
இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் வாதம் கடந்த 7-ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று (பிப்.18) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இதை முன்னிட்டு தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், திருநெல்வேலி சரக டிஐஜி கபில்குமார் சரட்கார், திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் சுகுணா சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் முரளி ராம்பா (தூத்துக்குடி), அருண் சக்திகுமார் (திருநெல்வேலி) உள்ளிட்ட அதிகாரிகள் தூத்துக்குடியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர்.
திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இருந்து 1,600 போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று மாலை முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago