மதுரை அருகே அழகர்கோயிலில் விடுதி அறையில் ஒய்வு பெற்ற தலைமை காவலர் காது அறுக்கப்பட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
விருதுநகர் இந்திரா நகரை சேர்ந்தவர் தங்கராஜ், (68). இவர், விருதுநகரில் தலைமை காவலராக பணிபுரிந்து விருப்ப ஒய்வு பெற்றவர். இவருக்கு 6 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. நேற்று முன்தினம் அதிகாலை தங்கராஜ் அழகர்கோயில் சென்றுள்ளார். அப்போது அவர், தன்னுடன் 27 வயது பெண்ணையும், 13 வயது சிறுமி மற்றும் 11 வயது சிறுவனையும் அழைத்துச் சென்றுள்ளார். அனைவரும் அழகர்கோயிலில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
அவர்கள் அறைக்கு சென்றபிறகு காலை முதல் இரவு வரை அறை பூட்டியிருந்தது. சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை தட்டிப்பார்த்துள்ளனர். அவர்கள் திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தங்கராஜ் கழிப்பறையில் இறந்து கிடந்துள்ளார். அவருடன் வந்த பெண்ணும், அந்த குழந்தைகளையும் காணவில்லை. அவர்கள் தப்பி சென்றுள்ளனர்.
தங்கராஜ் காது அறுக்கப்பட்ட நிலையில் காயம் இருந்துள்ளது. பிறப்பு உறுப்பிலும் காயம் ஏற்பட்டுர்ளளது. உடலை மீட்டு அப்பன் திருப்பதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தங்கராஜ் உடன் தங்கிய பெண்கள், அந்த குழந்தைகள் யார், எதற்காக அவர்கள் அழகர் கோயிலுக்கு வந்தனர், எதற்காக தப்பி சென்றார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
தங்கராஜ் செல்போன் நம்பருக்கு கடைசியாக யார், யார் அவருடன் பேசினார்கள் என்றும், விடுதி சிசிடிவி காமிரா பதிவுகளை கைப்பற்றி தப்பியோடிய பெண்கள், அந்த குழந்தைகள் குறித்த காட்சிப்பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்கின்றனர். இறந்த தங்கராஜ், மகள்கள் தற்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "தப்பியோடிய பெண், கொலையில் சம்பந்தப்பட்டுள்ளாரா? என்பது பற்றி தற்போது கூற இயலாது. தற்போது வரை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறோம். பிரேதப்பரிசோதனை முடிவிலே தெரிய வரும்", என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago