உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் இன்று ஒய்வு: தேர்தல் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

By செய்திப்பிரிவு

உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது. தேர்தல் தொடர்பான புகார்கள் வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கும், எஸ்.பி.க்களுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக இருக்கும் தூத்துக்குடி, கோவை, நெல்லை மாநகராட்சி மேயர் பதவி, 8 நகராட்சி தலைவர் பதவிகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலை திமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, பாமக, மமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புறக்கணித்துள்ளன. இதனால் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் மட்டுமே தேர்தல் களத்தில் உள்ளன. சில இடங்களில் மட்டும் இடதுசாரிகள் போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையே நெல்லை மேயர், புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் உள்ளிட்ட 64 உள்ளாட்சி பதவிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டனர்.

தூத்துக்குடி அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் அந்தோணி கிரேசியை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். கோவையில் அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து நேற்று பிரச்சாரம் செய்தார். மேலும், அதிமுக தரப்பில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது போல் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் அக்கட்சியின் வேட்பாளர் களுக்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில தலைவர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில தலைவர் தா.பாண்டியன் மற்றும் கம்யூ னிஸ்டு கட்சி நிர்வாகிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விறுவிறுப்பாக நடந்து வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடந்ததுபோல் வன்முறைகள் நிகழாமல் இருக்க உயர் நீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், எஸ்.பி.க்களுக்கும் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. அதை அவர்கள் தவறாமல் பின்பற்றவேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு செய்யப் படவேண்டும். தேர்தல் தொடர்பான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள் ளன என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான இடைத்தேர்தலுக்கு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத் தப்படுகின்றன. மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடை பெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22–ம் தேதி நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE