குட்கா ஊழல் விவகாரம்: ஒவ்வொரு எக்ஸ்க்ளூசிவ் செய்தியின் அறியப்படாத ஹீரோக்கள் சோர்ஸ்- செய்தியாளரின் அனுபவப் பகிர்வு

By எஸ்.விஜயகுமார்

'எக்ஸ்க்ளூசிவ்' செய்தி கிடைக்கும் போது, அந்தத் தகவலை அளிக்கும் தகவலாளி அடையாளத்தைக் (source) காப்பாற்ற வேண்டியது பத்திரிகையாளர்களின் கடமை.

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தை மிகுந்த பரபரப்புக்குள்ளாக்கிய குட்கா ஊழல் வழக்கை நான் வெளிக்கொண்டுவந்தபோது, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி என்ன தொலைபேசியில் அழைத்து, "இந்தச் செய்திக்குரிய தகவலை யார் அளித்தது என எனக்குத் தெரியும்" என்றார்.

என்னிடம் பேசிய அந்த ஓய்வுபெற்ற அதிகாரி, தனக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகள்தான் இந்தத் தகவலை உங்களுக்கு அளித்துள்ளார்கள் என்று சந்தேகப்பட்டார். அவரின் சந்தேகத்தை உடைக்கும் முன்பாக, நான் அவரிடம், "எனக்கு உங்களைத் தெரியும். இந்தச் செய்தி எழுதும் முன் நான்  உங்களிடம் பேசினேன் என்றேன். அவரும் ஆம், சரியாகச் சொன்னீர்கள் "என்றார்.

இந்த குட்கா ஊழல் உருவாகிய காலத்தில், அந்த அதிகாரி முக்கியப் பதவியில் இருந்தார். அப்போது, நான் அவரைச் சந்தித்து அவரின் கருத்துகளை அறிய நினைத்தேன். ஆனால், அந்த அதிகாரி மிகவும் சாதுவாக, கருத்து கூற மறுத்துவிட்டார். இந்தச் செய்திக்காக நான் ஒரு டஜன் பேரை சந்தித்துப் பேச முயன்றதில் இவரும் ஒருவர்.

நான் இந்தச் செய்தியை எழுதும் முன் நான் யாரைச் சந்தித்தேன், யாரிடம் பேசினேன் என்று யாருக்காவது தெரியுமா? ஒருபோதும் இல்லை. இந்தச் செய்தி வெளியானவுடன் ஏராளமானோர் என்னை அழைத்துப் பேசி இந்த ஊழல் குறித்து அதிர்ச்சி தெரிவித்தார்கள். அதுமட்டுமல்லாமல், வருமான வரி ஆவணங்கள் குறித்தும், யாரெல்லாம் குட்கா ஊழலில் பயனடைந்தார்கள் என்பது குறித்தும் அறிந்து கொள்வும், ஆர்வமாக இருந்தார்கள்.

என்னுடைய பத்திரிகை வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச் சவாலானதாகவே இந்த குட்கா ஊழல் செய்தியைப் பார்க்கிறேன். வருமான வரித்துறை முதல் தமிழக தலைமைச் செயலாளர் வரையிலான ரகசியக் குறிப்புகள் அந்த டைரியில் இருந்தன.

சென்னையில் தடை செய்யப்பட்ட குட்காவைப் பதுக்கிவைக்கவும், கடத்தவும், விற்கவும் உதவ எம்டிஎம் பிராண்ட் குட்கா தயாரிப்பாளரிடம் இருந்து எத்தனை அதிகாரிகள், அரசியல்வாதிகள் மிகப்பெரிய அளவில் பணம் பெற்றார்கள் என்பது குறித்த விவரங்கள் அந்த டைரியில் இருந்தன.

இந்த ஆவணங்களின் நகல் பிரதி 'தி இந்து'வுக்கு (ஆங்கிலம்) கிடைத்தும், மாநில அரசு அவ்வாறு எந்த ஆதாரங்களும் இல்லை என்றது. ஆதலால், மிகுந்த கண்காணிப்புடன், இந்த ஊழலை வெளிப்படுத்தும் வகையில் நான் தொடர்ந்து எழுதினேன்.

இந்த குட்கா ஊழலில் ஆதாயம் பெற்றவர்களுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து அதிகமான அழுத்தம் தரப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது. என்னுடைய தொலைபேசி, செல்போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது என்று நான் தீர்க்கமாக நம்பினேன். மூத்த போலீஸ் அதிகாரிகளும் என்னை எச்சரித்தனர்.

என்னைப் பொறுத்தவரை விசாரணை அதிகாரிகள் தகவல் அளிப்போரைக் காட்டிலும், தகவல் மீதுதான் அதிகமாக கவனம் செலுத்துவார்கள். ஒருவேளை செய்தியை எழுதுபவருக்கும், அவருக்குச் செய்தியை அளிக்கும் மூலமாக இருப்பவருக்கும் சிக்கல் நேருமா என நினைத்தேன். இதனால், அந்தச் செய்திக்கு 'பாலோ-ஆன்' செய்தி எழுதுவது கடினமாக இருந்தது.

குட்கா செய்திக்கு உதவிய இரு தகவலாளிகள் (சோர்ஸ்) கண்காணிப்பு பலமாக இருப்பதால், அச்சப்பட்டு என்னைச் சந்திக்க மறுத்தார்கள், சிலரோ என் செல்போன் எண்ணை 'பிளாக்' செய்தனர்.

காவல்துறையில் இருக்கும் எனது நண்பர்கள் என்னைச் சந்திப்பதைத் தவிர்த்தனர். நெருக்கம் காட்டாமல் விலகினார்கள். நான் ஃபேஸ்புக்கில் இருந்து விலகினேன், தனிப்பட்ட சந்திப்புகளை குறைத்துக்கொண்டேன். செல்போனை மிகக்குறைவாகவே பயன்படுத்தினேன்.

அலுவலகத்தில் செல்போனை வைத்துவிட்டு, பஸ் பிடித்து சிலரைக் கடற்கரையில் செய்திக்காகச் சந்தித்துவிட்டு வரும்போதெல்லாம், கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறோமா என்றுகூட நான் நினைத்தேன். எனக்குத் தகவல் அளிக்கும் 'தகவலாளி' அடையாளத்தை மறைக்கக் கூறி எனக்கு 12-க்கும் மேற்பட்டோரிடம் அழைப்பு வந்தது.

உண்மை வெளிக்கொண்டுவர வேண்டும் என்கிற ஒருவிஷயத்தைத் தவிர்த்து எனக்கு 'தகவலாளியாக' இருந்தவர்களுக்கு எந்த நோக்கமும் இல்லை.

ஒவ்வொரு 'எக்ஸ்க்ளூசிவ்' (ஸ்கூப்) செய்தியிலும் அறியப்படாத ஹீரோக்கள் இருக்கிறார்கள். தங்களுக்குக் கிடைக்கும் எந்தத் தகவலையும் தீர ஆய்வு செய்து, அச்சு ஆவணமாக எடுத்து சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி செய்துகொள்வது பத்திரிகையாளரின் கடமையாகும்.

விவாதமில்லாத முடிவு கிடைக்கும் வரை குட்கா ஊழல் குறித்த தொடர் கட்டுரைகள் வெளியாகும். இந்த வழக்கை உயிர்ப்பிக்க, வளர்க்கப் புதிதாக தகவல் அளிப்போர், உள்ளீடுகள் தருவோர் வருவார்கள். தகவல் அளிக்கும் மனிதர்களின் அடையாளம் எப்போதும் பாதுகாக்கப்படும் என்பதை உறுதி செய்கிறேன். 

தமிழில்: போத்திராஜ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்