தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாள 11 இடங்களில் சேகரிப்பு மையங்கள்: ரூ.2 கோடியில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை

By ச.கார்த்திகேயன்

வீடுகளில் பயன்படுத்திய பின் வெளியேற்றப்படும் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாள 11 இடங்களில் சேகரிப்பு மையங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

வீடுகளில் உள்ள கொசுக்கள், கரையான், கரப்பான்பூச்சி, எறும்புகள் போன்றவற்றை அழிக்க பல்வேறு வகையான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு அதன் கழிவுகள் வெளியேற்றப் படுகின்றன. மேலும் உடல் வெப்பநிலையை கண்டறிய உதவும் வெப்பமானிகள், வீடுகளில் பயன்படுத்தப்படும் டியூப் லைட்கள், சிஎஃப்எல் பல்புகள் போன்றவை உடையும்போது கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன.

அதேபோன்று பெயின்ட் வாளிகள், பேட்டரிகள், வீடுகள் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்ய பயன்படும் திரவங்கள் மற்றும் அமிலங்கள் அடைக்கப்பட்ட பாட்டில்கள், பட்டாசு வெடிப்பதன்மூலம் உருவாகும் குப்பைகள் போன்றவையும் கழிவுகளாக வெளியேறுகின்றன. இவை வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் தீங்கு விளைவிக்கும் கழிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றை, மற்ற குப்பைக் கழிவுகளுடன் சேர்த்து குப்பை கொட்டும்வளாகங்களில் கொட்டும்போது, மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்து கின்றன.

அதனால் தீங்கு விளைவிக்கக் கூடிய ரசாயனப் பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கழிவுப் பொருட்களைச் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவித பாதிப்புமின்றி அறிவியல் முறையில் பாதுகாப்பாக கையாள தகுந்த மேலாண்மை அவசியமாகிறது. அதற்காக மத்தியஅரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், தீங்கு விளைவிக்கும் மற்றும் இதர கழிவுகள் (மேலாண்மை மற்றும் எல்லை கடந்து கொண்டு செல்லுதல்) தொடர்பான விதிகள் 2016 அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியில் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் தினமும் 5,249 டன் குப்பை சேகரமாகிறது. மத்திய அரசு அறிவுறுத்தல்படி குப்பைகளை வகை பிரித்து பெறுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு வகை பிரித்து பெறுவதன் மூலம், பல கழிவுகளை மறுசுழற்சிக்கும், இயற்கை உரம் தயாரிக்கவும் பயன்படுத்த முடியும். இதன் விளைவாக நிலத்தில் கொட்டப்படும் கழிவுகளின் அளவு குறைகிறது.

ஏற்கெனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்வது, உணவு கழிவுகளில் இருந்து சமையல் காஸ் தயாரிப்பது, மக்கக்கூடிய வீட்டு கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிப்பது போன்ற பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாநகராட்சியின் 11 மண்டலங்களில் தலா ஒரு இடத்தில் மொத்தம் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

வீடு வீடாக குப்பைகளை சேகரிக்கும்போது, தீங்கு விளைவிக்கும் கழிவுகள் தனியாக பெறப்பட்டு, அவை இந்த மையங்களில் வைக்கப்படும். அதில் மறுசுழற்சிக்கு உகந்த கழிவுகள், உரிய மறு சுழற்சியாளரிடம் வழங்கப்படும். மற்றவை, கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் பிரத்யேக தீங்கு விளைவிக்கும் கழிவுகள் அழிப்பு நிறுவனத்தில் முறையாக அழிக்கப்படும். இதன் மூலம் சென்னையின் சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்