விவசாய நிலத்தில் 18 நாட் களாக முகாமிட்டிருந்த 'சின்ன தம்பி’ காட்டு யானை, 2-வது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.
கோவை பெரியதடாகத்தை அடுத்த சோமையம்பாளையம் கிராமத்தில் விவசாய நிலங்களில் ஊடுருவி வந்த காட்டு யானை ‘சின்னதம்பி’, கடந்த 25-ம் தேதி வனத்துறையால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கும்கி யானைகளுடன் மீட்புப் பணியில் பொக்லைன் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. அப்போது, அதன் இரு தந்தங்களும் உடைந் தன. கும்கி யானைகள் குத்தியதால் காயம் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைர லாகி விவாதத்தை கிளப்பியது. மீட்கப்பட்ட அன்று நள்ளிரவு டாப்சிலிப் கொண்டு செல்லப்பட்டு, அதன் கழுத்தில் ஜிபிஎஸ் உடன் கூடிய ரேடியோ காலர் கருவி பொருத்தி வனப்பகுதியில் விடப்பட்டது. அதன் நடமாட் டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர்.
இந்நிலையில், கடந்த 29-ம் தேதி உலாந்தி வனப்பகுதி, 30-ம் தேதி மானாம்பள்ளி, பூமாட்டி, கருவரை, 31-ம் தேதி அதிகாலை பொள்ளாச்சி வனச்சரகம் மைத் திரி, பனப்பள்ளம், பந்தக்கால் அம்மன்பதி வழியாக வெளியே றிய ‘சின்னதம்பி’, பொங்காலியூர், மயிலாடுரை, தென்னந்தோப்பு வழியாக கோட்டூர் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. அங்கி ருந்து, வனத் துறையினர் வனப் பகுதிக்குள் விரட்டினர்.
இதைத்தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி சுமார் 30 கி.மீ. தொலைவு கடந்து, உடுமலையை அடுத்த தீபாலபட்டி கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் தென் னந்தோப்புக்குள் முகாமிட்டது. பின்னர் வாளவாடி, அம்மாபட்டி, பள்ளபாளையம், மருள்பட்டி ஆகிய கிராமங்களைக் கடந்து (சுமார் 20 கி.மீ.), 2-ம் தேதி அதிகாலை கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி சர்க்கரை ஆலை வளாக கரும்பு பண் ணையில் புகுந்தது. கடந்த 9-ம் தேதி வரை அங்கேயே முகா மிட்டிருந்த யானையை மீட்க, டாப்சிலிப் முகாமில் இருந்து கும்கி யானைகள் கலீம், மாரி யப்பன் வரவழைக்கப்பட்டது. கும்கிகளுடன் விளையாடி மகிழ்ந்து வந்த நிலையில், காட்டு யானை முகாமிட்டிருந்த குட்டையை ஆலை நிர்வாகம் மூடியது. இதனால், அங்கிருந்து வெளியேறி 4 கி.மீ. தொலைவில் உள்ள கண்ணாடிபுத்தூர் விவ சாய நிலத்துக்குள் புகுந்தது. கரும்பு, வாழை, நெல் தோட்டங் களிலிருந்து வெளியேறாமல் கடந்த 6 நாட்களாக அங்கேயே முகாமிட்டது.
இதனிடையே சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, வனத்துறை மருத்துவ அலுவலர் கே.அசோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று மயக்க ஊசி செலுத்தினர். கும்கி யானைகள் மற்றும் வன ஊழியர்கள் மூலமாக 'சின்னதம்பி' காட்டு யானை பத்திரமாக மீட்கப்பட்டு, மீண்டும் டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'சின்னதம்பி' காட்டு யானை மீட்புப் பணியில், பொக் லைன் வாகனங்கள் பயன்படுத் தப்படவில்லை.
வன ஊழியர்கள் மற்றும் கும்கிகளின் உதவியுடன் கயிறு கட்டி மீட்கப்பட்டது. இந்த யானை கும்கியாக மாற்றப்படாது. வளர்ப்பு யானையாக மாற்றப்படும்’ என்ற னர்.
யானை மீட்கப்படுவதை அறிந்து, ஆயிரக்கணக்கான மக் கள் திரண்டனர். யானையை மீட்டுச் சென்ற வாகனத்தின் முன்னும், பின்னும் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் சென்று இளைஞர்கள், 'சின்னதம்பி'க்கு பிரியாவிடை கொடுத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago