மக்களவை தேர்தல் பணிகளில் பாஜக தீவிரம்; உ.பி. முதல்வர் 12-ம் தேதி நெல்லை வருகை: கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்

By அ.அருள்தாசன்

தமிழகம், புதுச்சேரியில் மொத் தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் தேர்தல் பணி களில் பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில், உத்தரப் பிரதேச முதல் வர் யோகி ஆதித்யநாத் வரும் 12-ம் தேதி திருநெல்வேலி வரு கிறார். பாஜக நிர்வாகிகள், வாக் குச் சாவடி பொறுப்பாளர் களுடன் அவர் கலந்துரையாடு கிறார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன் னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் பாஜக கடந்த ஓராண் டாகவே தேர்தல் பணிகளை திட்ட மிட்டு செயல்படுத்தி வருகிறது.

மதுரையில் கடந்த 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம், புதுச் சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் 4 அல்லது 5 தொகுதிகளுக்கு ஒருவர் என்ற முறையில் மத்திய அமைச்சர்கள், கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளனர்.

தேர்தல் பணிகளில் கட்சி நிர் வாகிகள், தொண்டர்கள், வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் முழுவீச் சில் ஈடுபட ஊக்கம் அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை பாஜக மேற்கொண்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மக்களவைத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் 12-ம் தேதி திருநெல்வேலிக்கு வரவுள்ளார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், கூட்டத்துக்கான இடம் தேர்வு செய்யும் பணிகளில் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி மக்களவை தொகுதியை முக்கியமாக கொண்டு இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த தொகுதியிலுள்ள சட்டப் பேரவை தொகுதிவாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை ஆதித்யநாத் சந்திக்கிறார். தூத்துக்குடி, தென் காசி மக்களவை தொகுதி வாக்குச் சாவடி பொறுப்பாளர் களும் இந்தக் கூட்டத்தில் பங் கேற்கிறார்கள் என்று மாநில பாஜக முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்