கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் தர்ணா

By செ.ஞானபிரகாஷ்

துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு அமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாகவும் இலவச அரிசி, பொங்கல் பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காததையும் கண்டித்து மாநில முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு அமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் இன்று (புதன்கிழமை) தர்ணாவில் ஈடுபட்டனர்.

முதல்வர் நாராயணசாமி கருப்பு உடையணிந்தும், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கருப்பு துண்டு அணிந்தும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

39 மக்கள் நலக் கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்தால் மட்டுமே தர்ணாவில் இருந்து கலைந்து செல்வோம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பாரதி பூங்காவில் திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் கிரண்பேடியின் உருவபொம்மையை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாராயணசாமியை கிரண்பேடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.

இது குறித்து சீனியர் எஸ்பி அபூர்வகுப்தா முதல்வருக்குத் தகவல் தெரிவித்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்த நாராயணசாமி, 39 கோரிக்கைகளையும் நிறைவேற்றுமாறு கூறி பேச்சுவார்த்தைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்