இனிவரும் தேர்தல்களில் வன்னியர்கள் எவரும் திமுக, அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது எனவும், ஜெயலலிதாவுக்குப் போடும் ஒவ்வொரு ஒட்டும், வன்னியச் சமுதாயத்திற்கு வைக்கப்படும் வேட்டு என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
கடலூர் நாடாளுமன்றத் தொகுதியின் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர். கோவிந்தசாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்ற ராமதாஸ் வேட்பாளரை ஆர்.கோவிந்தசாமி படையாச்சி என அறிவித்துவிட்டுப் பின்னர் பேசியது:
வன்னியச் சமுதாயத்திற்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஜெயலலிதாவும், கருணாநிதியும் வன்னியர்கள் வாக்கு தேவையில்லை எனப் பிரகடனப்படுத்தத் தயாரா. வன்னியர்களின் வாக்கு மட்டும் தேவை எனக் கருதும் இவர்கள் அவர்களுக்கான உரிமையை மறுப்பது எந்தவிதத்தில் நியாயம்
திமுக மற்றும் அதிமுகவில் உள்ள வன்னியர்களும் என் பேச்சைக் கேட்கும் காலம் வந்துவிட்டது. தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மூலம் சிறந்த அடித்தளத்தை அமைத்து, 2016-ல் சட்டமன்றத்தை நோக்கி செல்ல வேண்டும். எனவே சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago