இயற்கை பொருட்களால் ஒரு புத்தக அரங்கு: செயலாலும் சுற்றுச்சூழலை வலியுறுத்தும் ‘இயல்வாகை’

By கே.கே.மகேஷ்

மதுரை புத்தக கண்காட்சியில் வெறும் சொல்லால் மட்டுமின்றி செயலாலும் வலியுறுத்தும் வகையில், ‘இயல்வாகை’ பதிப்பகத்தினர் இயற்கை பொருட்களால் ஆன புத்தக அரங்கை அமைத்துள்ளனர்.

மதுரை தமுக்கத்தில் நடக்கும் புத்தக திருவிழாவில் ,இயல்வாகை பதிப்பகத்தினரின் அரங்கு எண் 60 முழுக்க இயற்கையை வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பிளக்ஸ் போர்டுகளுக்கு பதில் திரைச்சீலைகளும், தரைவிரிப்புக்கு பதில் சணல் சாக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இங்குள்ள புத்தக அலமாரிகள்கூட மூங்கிலால் செய்யப்பட்டுள்ளன. உள்அலங்காரத்துக்கு இயற்கை பொருட்களையே பயன்படுத் தியுள்ளனர். சுரைக்காய் கூடு, ராட்சத தேங்காய், காடுகளில் கிடைத்த கலைப்பொருட்கள், பறவைகளின் உதிர்ந்த இறகுகளால் அரங்கு அலங்கரி க்கப்பட்டுள்ளது. புத்தகங்களுடன் காய்கறி, கீரை பயிர்களின் நாட்டு ரக விதைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. அரங்கு பொறுப்பாளர் வெற்றிமாறன் கூறும்போது, ஒரு பகுதியில் வாழ்கிற தாவரங்களுக்கும், அங்கு வாழ்கிற உயிரினங்களுக்கும் உணவு,உணர்வு ரீதியாக தொடர்பு உள்ளது. ஆனால், தற்போது நெல்லில் தொடங்கி, காய்கறி, பழங்கள் வரையில் நாட்டு ரகங்கள் அழிக்கப்பட்டு, வீரிய ஒட்டுரகங்களும், மரபணு மாற்றுப் பயிர்களும் அதிகரித்து வருகின்றன. எனவே, நாட்டு விதைகளை கண்டறிவதையும், அவற்றை பரப்புவதையும் லட்சியமாக வைத்திருந்தார் நம்மாழ்வார்.

அவரது வழியில் இந்த விதைகளை மக்களிடம் சேர்ப்பதற்காக விற்பனைக்கு வைத்துள்ளோம்.

இதைக்கொண்டு இயற்கை யான வீட்டுத்தோட்டம் அமைத்து கீரை, காய்கறிகளை பெறலாம். சுற்றுச்சூழல் புத்தகங்கள், காந்தியடிகளின் கிராமப் பொருளாதார நூல்கள், நம் மாழ்வார் உரைகள் சி.டி.க்கள் விற்பனைக்கு உள்ளன. அதேபோல குழந்தைகளுக்கான நல்லபுத்தகங்களும் உள்ளன.

புத்தகங்களையும், விதைகளையும்கூட கேடில்லாத துணி பைகளிலேயே வழங்கு கிறோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE