மதுரை மாநகராட்சியில் சொத்து வரி கடும் உயர்வால் மக்கள் அதிர்ச்சி: வீடுகளுக்கு 50%, வணிக கட்டிடங்களுக்கு 100% அதிகரிப்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகராட்சியில் வீடுகள், வர்த்தக கட்டிடங்களுக்குச் சொத்துவரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து முன் தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் மொத்தம் 3 லட்சத்து 19 ஆயிரத்து 100 கட்டிடங்களுக்குச் சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 80 ஆயிரம் வீடுகளும், 35 ஆயிரம் வர்த்தகக் கட்டிடங்களும், 2,500 தொழிற்சாலைகளும், 200 பள்ளிக் கட்டிடங்களும், 1,400 அரசுக் கட்டி டங்களும் உள்ளன.

இந்தக் கட்டிடங்களுக்கான சொத்து வரியை 6 மாதங்களுக்கு ஒரு முறை 2 தவணையாக மாநகராட்சி வசூலிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே சொத்து வரியை உயர்த்த மதுரை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப் பட்டபோது மீண்டும் ஒருமுறை சொத்து வரி உயர்த்த திட்டமிடப்பட்டது.

வரியை உயர்த்தினால் தேர்தலில் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டும் என் பதால் ஆளும்கட்சியின் எதிர்ப்பால் வரியை உயர்த்தும் முடிவு மீண்டும் கை விடப்பட்டது. இந்நிலையில் தற்போது வீடுகளுக்கும், வர்த்தக கட்டிடங்களுக்கும் சொத்து வரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் என திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மதுரை மாநகராட்சி மட்டும் தனியாகச் சொத்து வரியை உயர்த்தவில்லை. தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மதுரையில் முன்பு ‘ஏ’ கிரேடு வீட்டுக்கு சதுர அடிக்கு 3 ரூபாய் இருந்தது தற்போது 4.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ‘பி’ கிரேடு வீட்டுக்கு 2 ரூபாய் இருந்த சொத்து வரி 3 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

‘சி’ கிரேடு வீட்டுக்கு 1 ரூபாய் இருந்த சொத்து வரி 1.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தகக் கட்டிடங்களைப் பொருத் தவரையில் ‘ஏ’ கிரேடு கட்டிடத்துக்கு 9 ரூபாய் இருந்த சொத்து வரி 18 ரூபாயாகவும், ‘பி’ கிரேடு கட்டிடத்துக்கு 6 ரூபாய் இருந்த சொத்து வரி 12 ரூபாயாகவும், ‘சி’ கிரேடு கட்டிடத்துக்கு 3 ரூபாய் இருந்த சொத்து வரி 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வு தவிர்க்க முடியாதது. இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு தற்போதுதான் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கணக்கிடப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வாடகை உயரும் அபாயம்

வீடு, கடை மற்றும் வணிக வளாகங்களின் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதால், வீடு, கடைகள் வாடகை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுரையைப் பொருத்தவரையில் ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் வாடகை வீடுகளில்தான் வசிக்கின்றனர். அவர்களுக்கு சென்னை, கோவை, திருச்சி போன்ற மற்ற மாநகரங்கள் போல் நிரந்தரமான பெரிய வருவாய் கிடையாது.

72 வார்டுகளைக் கொண்டிருந்த மதுரை மாநகராட்சியில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளை இணைத்து 100 வார்டாக உயர்த்தப்பட்டது. இதனால், பெரும்பாலும் கிராமங்கள்தான் அதிகம் உள்ளன.

வரி உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே வரி சீரமைப்பு, கட்டிடங்களை முறைப்படுத்துதல் என்று கூறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வரைப்படத்தின் அடிப்படையில் கட்டாத கட்டிடங்களுக்கு மறு மதிப்பீடு வரி நிர்ணயம் செய்து, அபராதமும் விதிக்கப்பட்டது. அப்போதே ரூ.9 ஆயிரம் இருந்த வீடுகளின் சொத்து வரி, 47 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. தற்போது இந்த வரியும் 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்