பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கை: வெங்கையா நாயுடு

பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தஅரசு நடவடிக்கை மேற்கொண்டுள் ளதாக, மத்திய நகர்ப்புற மேம் பாட்டுத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடு கூறினார்.

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் 29-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடந்தது.விழாவில் வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கிப் பேசும்போது,‘‘இந்தியாவில் 700 பல்கலைக் கழகங்கள் உள்ளன. 37 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன.

இதில், 2.8 கோடி மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். உயர் கல்வியைப் பொறுத்தவரை நாம் பின்தங்கி இருக்கிறோம். உயர் கல்வி முன்னேற்றத்துக்கு தற்போதைய அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

மத்திய நகர்ப்புற மேம்பாடு, வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளு மன்ற விவகாரங்கள் துறை அமைச் சர் வெங்கைய நாயுடு, பேசும் போது, ‘‘இந்தியாவில் தரமான தொழில்நுட்ப கல்வி அளிப்பதில் விஐடி பல்கலைக்கழகம் முன்னணி யில் உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் கிண்டி, ரூர்கி, புனே, சிபாபூரில் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கினார்கள். நாடு சுதந்திரம் அடைந்தபோது 24 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. அதன்

பிறகு 5 ஐஐடிக்கள், 20 மண்டலபொறியியல் கல்லூரிகள் தொடங் கப்பட்டன. தற்போது நாட்டில் 3 ஆயிரம் பொறியியல் கல்லூரிகளில் இருந்து, ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவர்கள் வெளியே வருகிறார் கள்.

இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம்பொறியாளர்கள் வெளிநாடு களுக்கு செல்கிறார்கள். இதன் மூலம் நாட்டுக்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள விஞ்ஞா னிகளில் 50 சதவீதம்பேர் இந்தியர் கள். அதிலும் பாதிப்பேர் தென்னிந் தியர்கள். நாஸ்காம் புள்ளிவிவரங் களின்படி, இந்தியாவில் 15- 20 சதவீதம் பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறு கிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது. இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்தும் நடவடிக் கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது ’’ என்றார்.

நிகழ்ச்சியில், 3,574 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிக்கப்பட் டது. கவுரவ விருந்தினராக பேஃபால் நிறுவன பொதுமேலாளர் அனுபம் பகுஜா கலந்துகொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE