வரும் 11-ம் தேதி சனி பகவான் ஸ்தலமான ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா நடப்பதால் அன்றைய தினம் காரைக்காலுக்கு உள்ளூர் விடுமுறை என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வரபகவான் ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா 14 வருடங்களுக்குப் பிறகு, இறையருள் துணையுடன் வரும் 11-ம் தேதி திங்கட்கிழமையன்று சிறப்பாக நடைபெற உள்ளது.
அந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பங்கேற்பார்கள். எனவே கும்பாபிஷேகத்தில் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பதற்கு ஏதுவாக குடமுழுக்கு விழா தினத்தன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று முதல்வர் வரும் 11-ம் தேதி அன்று காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago